கோபி, சுதாகருக்கு ஏற்பட்ட “பரிதாபங்கள்”.. போலி டாக்டர் பட்டம் கொடுத்த கும்பல்! அண்ணா பல்கலையில் ஷாக்
வடிவேலு, தேவா ஆகியோருக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட நிகழ்ச்சியில் பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகருக்கும் விருது வழங்கப்பட்டு உள்ளது
சென்னை: நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்டோருக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் தனியார் அமைப்பு ஒன்று போலியாக டாக்டர் பட்டம் வழங்கியதாக அண்ணா பல்கலைக்கழகம் பரபரப்பு புகாரை அளித்து இருக்கும் நிலையில் அதே நிகழ்ச்சியில் பிரபல யூடியூபர்களான கோபி மற்றும் சுதாகர் ஆகியோருக்கும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு இருக்கிறது.
சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை அமைப்பு சார்பில் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு, இசை அமைப்பாளர் தேவா உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட கவுரவ டாக்டர் பட்டம் தற்போது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
அதற்கு காரணம் நீதியரசர் வள்ளிநாயகத்தின் பெயர் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி போலியான டாக்டர் பட்டத்தை இந்த நிறுவனம் வழங்கியதாக கூறப்படுகிறது.

கவுரவ டாக்டர் பட்டம்
கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைந்து உள்ள விவேகானந்தர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம் இசையமைப்பாளர் தேவாவுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார். அவருடன் சேர்த்து பலருக்கு பல்வேறு பெயர்களில் விருதுகள் வழங்கப்பட்டன.

துணை வேந்தர் மறுப்பு
நடிகர் வடிவேலு இந்த நிகழ்ச்சிக்கு வராததால் அவருக்கு வீடு தேடி சென்று டாக்டர் பட்டத்தை வழங்கினார்கள். இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் இவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கியதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் வடிவேலுவுக்கும் தேவாவுக்கும் தாங்கள் டாக்டர் பட்டத்தை வழங்கவில்லை என மறுத்து உள்ளார்

அண்ணா பல்கலை. அரங்கம்
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்காக அண்ணா பல்கலைக்கழக வளாகத்தை பயன்படுத்தியது கண்டிக்கத்தக்கது. ஓய்வுபெற்ற நீதியரசர் டாக்டர் வள்ளிநாயகத்தையும் ஏமாற்றி உள்ளனர். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுவதாக சொல்லி அவரை சிறப்பு விருந்தினராக அழைத்து இருக்கலாம்.

போலீசிடம் புகார்
மருத்துவர் வள்ளிநாயகம் வருவதாக எங்களிடம் சொன்னதால் நாங்கள் இடம் கொடுத்து உள்ளோம். இருவரையும் வித்தியாசமாக அவர்கள் உபயோகப்படுத்தி உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. நாங்கள் நடவடிக்கையை தொடங்கிவிட்டோம். போலீசாரிடம் புகாரளித்து உள்ளோம். அண்ணா பல்கலைக்கழகம் புனிதமான இடம். அதிலும் விவேகானந்தா அரங்கம் பழமைவாய்ந்த, பெருமையான அரங்கம்.

பல்கலைக்கழகத்துக்கு மட்டுமே அதிகாரம்
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தை தவறாக பயன்படுத்தியதற்காக அபராதம் வழங்குவதுடன் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். கவுரவ டாக்டர் பட்டத்தை ஒரு பல்கலைக்கழகம்தான் கொடுக்க வேண்டும். இனி யாரும் இதுபோன்ற செயல்களை செய்யக்கூடாது என்பதற்கு ஏற்ப கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம்.

போலி கடிதமா
இந்த அரங்கத்தில் வைத்து இப்படி ஒரு தவறான செயல் நடந்ததற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் பெயர் இருந்ததால் டீனும் கடிதத்தை பார்த்தவுடன் அனுமதி வழங்கிவிட்டார். இது வள்ளிநாயகம் கொடுத்த கடிதமா அல்லது அதுவும் போலியா என தெரியவில்லை. அதில் இந்திய அரசு முத்திரை இருந்தது.

என்ன சொல்கிறார் நீதிபதி வள்ளிநாயகம்?
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அலைபேசி மூலமாக விளக்கம் கொடுத்து இருக்கிறார் ஓய்வுபெற்ற நீதியரசர் வள்ளிநாயகம். அதில், "நான் கையெழுத்து போடவில்லை. உண்மையாகவே எனக்கு என்னவென்று தெரியாது. நான் ஒரு சிறப்பு விருந்தினராக மட்டுமே பங்கேற்றேன். அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்ததால் நான் வந்தேன்." என்று கூறினார்.

கோபி, சுதாகர்
இந்த நிலையில்தான் இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலருக்கும் விருதுகள் வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்து உள்ளது. குறிப்பாக பரிதாபங்கள் யூடியூப் சேனலை நடத்தி வரும் கோபி மற்றும் சுதாகருக்கு "இன்ஸ்பிரேஷ்னல் யூத் ஐகான்" என்ற விருதை வழங்கி இருக்கிறார்கள். அதேபோல் நடன இயக்குநர் சாண்டி, கோகுல், நகைச்சுவை கலைஞரும், பேச்சாளருமான ஈரோடு மகேஷ் , நடிகர் கஜராஜ் உள்ளிட்டோருக்கும் சிறப்பு விருதுகள் இந்த விழாவில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications