சென்னை விமான நிலையத்தில் யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபுவின் கார்களை பூட்டிய அதிகாரிகள்! பரபரப்பு
சென்னை: சென்னை விமான நிலையத்தில் யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபு ஆகியோரின் கார்களுக்கு பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கல்லீரல் புற்றுநோய் முற்றிய நிலையில் இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டு வந்த பவதாரிணி நேற்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார். இதையடுத்து அவருடைய உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.

சென்னை விமான நிலையம் வந்த பவதாரிணியின் உடல் திநகரில் உள்ள இளையராஜாவின் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
பவதாரிணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக திநகரில் உள்ல இளையராஜாவின் இல்லத்திற்கு இயக்குநர்கள் வெங்கட் பிரபு, சுதா கொங்குரா, நடிகர் பிரேம் ஜி, பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் வந்திருந்தனர். பவதாரிணியின் இறுதி சடங்கிற்காக அவருடைய உடல் இரவு 10 மணி அளவில் சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்த நிலையில் இலங்கையிலிருந்து தனது சகோதரியின் உடலை கொண்டு வர சென்றிருந்த யுவன் சங்கர் ராஜா சென்னை விமான நிலையம் வந்தார். அவர் அங்கிருந்து வீட்டிற்கு செல்ல அவருடைய கார் தயார் நிலையில் இருந்தது. அப்போது அவருடைய ஓட்டுநர் காரை எடுக்க முயன்ற போது முடியவில்லை. பிறகு பார்த்தால் அவருடைய காரின் டயர் லாக் செய்யப்பட்டிருந்தது.

அது போல் பவதாரிணியின் உடலை பெற வந்த வெங்கட் பிரபுவின் காரும் லாக் செய்யப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுவாக விஐபி பார்க்கிங்கில் வர அதற்கென பாஸ் வாங்க வேண்டும். ஒரு வேளை துக்க நிகழ்வால் அவசரத்தில் இவர்கள் பாஸ் வாங்காமல் விஐபி பார்க்கிங்கில் காரை நிறுத்தியிருந்தனரா என தெரியவில்லை.
இதையடுத்து யுவன் சங்கர் ராஜா தனது சூழலை எடுத்துச் சொன்னதும் அந்த பூட்டு நீக்கப்பட்டது. அது போல் வெங்கட் பிரபுவின் கார் பூட்டும் நீக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கான உண்மையான காரணம் என்னவென தெரியவில்லை.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications