தமிழகத்தில் ஜிகா பாதிப்பு இல்லை...கருப்பு பூஞ்சை பாதிப்பால் 122 பேர் மரணம் - மா.சுப்ரமணியன்
கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள வீடுகளில் நேரில் சென்று பரிசோதனை செய்ததில் யாருக்கும் ஜிகா வைரஸ் காய்ச்சல் இல்லை என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 3,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 122 பேர் மரணமடைந்துள்ளதாகவும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளனர். கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள வீடுகளில் நேரில் சென்று பரிசோதனை செய்ததில் யாருக்கும் ஜிகா வைரஸ் காய்ச்சல் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா 2வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. கொரோனாவிலிருந்து மீண்டவர்களை கருப்பு பூஞ்சை நோய் அதிகளவில் பாதிப்பு வருகிறது. மியூகோர்மைகாசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் ஸ்டீராய்டு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள், சர்க்கரை நோயாளிகளை எளிதில் தாக்குகிறது.

கருப்பு பூஞ்சை நோய் தாக்குதலுக்கு ஆளானவர்கள், கண்ணை சுற்றி வீக்கம், வலி ஆகியவை இருக்கும். இதனால் கண் பறிபோகும் வாய்ப்பும் உள்ளது. பலர் கருப்பு பூஞ்சையால் மரணம் அடைந்தும் வருகின்றனர். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் தான் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு அதிகமாக உள்ளது.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள வீடுகளில் நேரில் சென்று பரிசோதனை செய்ததில் யாருக்கும் ஜிகா வைரஸ் காய்ச்சல் இல்லை; கேரளாவில் இருந்து தமிழ்நாடு வரும் பொது மக்களை பரிசோதிக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறினார்.
தமிழகத்தில் 3,929 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கபட்டுள்ளனர்; இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளனர். கருப்பு பூஞ்சை நோய்க்காக தமிழகம் முழுவதும் 7000 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாவும் தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications