ஏன் போடுறீங்க? தமிழக அரசின் HPV கேன்சர் தடுப்பூசி திட்டத்தை.. நைசாக எதிர்க்கும் ZOHO ஸ்ரீதர் வேம்பு
சென்னை: தமிழ்நாட்டில் இலவச HPV தடுப்பூசிகள் செலுத்துவதற்கு Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கடும் விமர்சனங்களை வைத்து உள்ளார்.
Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தடுப்பூசிக்கு எதிராக வெளியிட்ட பதிவு சர்ச்சையை கிளப்பியுள்ளது. சமூக வலைத்தளங்களில் அவரின் போஸ்டுக்கு கடுமையான எதிர்ப்பு அலை நிலவி வருகிறது.

Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு வெளியிட்ட போஸ்டில், பெற்றோர்கள் நான் இங்கே கொடுத்துள்ள ஆய்வு முடிவுகளை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிய குழந்தைகளுக்கு நாம் அதிகப்படியான தடுப்பூசிகள் கொடுத்து வருகிறோம். நாம் அதிகப்படியாக வேக்சின் கொடுப்பதற்கான சான்றுகள் அதிகரித்து வருவதாக நான் நம்புகிறேன். இது இந்தியாவிலும் பரவி வருகிறது, இதே சூழலில் இந்தியாவில் ஆட்டிசம் வேகமாக அதிகரித்து வருவதைக் காண்கிறோம், என்று கூறி உள்ளார்.
மெக்கல்லக் ஃபவுண்டேஷன் (McCullough Foundation) வெளியிட்ட ஆய்வு ஒன்றை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த ஆய்வு, 300-க்கும் மேற்பட்ட முடிவுகளை ஆய்வு செய்ததாகவும், குழந்தை பருவ தடுப்பூசிகள் ஆட்டிசத்திற்கு ஒரு முக்கிய ஆபத்து காரணி என்றும் கூறியுள்ளது.

மீண்டும் எதிர்ப்பு
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இலவச HPV தடுப்பூசிகள் செலுத்துவதற்கு Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கடும் விமர்சனங்களை வைத்து உள்ளார். ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தடுப்பூசிக்கு எதிராக மீண்டும் பதிவிட்டுள்ளார். அதில், சஹர்சா பகுதியில் HPV தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு, 30 முதல் 35 இளம் பெண் மாணவிகள் மயக்கமடைந்தனர். அவர்கள் சதார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சூழல் சாதாரணமானது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
HPV (மனித பாப்பிலோமா வைரஸ்) ஒரு பாலியல் தொற்று நோய். இது வழக்கமான தொடர்புகள் அல்லது அருகருகே இருப்பதன் மூலம் பரவுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு ஏன் வேக்சின்? இந்தியாவில் மிக இளம் வயது பெண்களுக்கு இந்தத் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மூன்று நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் வெளியான ஒரு செய்தி, "இலவச HPV தடுப்பூசிகள் மூலம் புற்றுநோய் இல்லாத எதிர்காலத்திற்கு தமிழ்நாடு வழி வகுக்கிறது" என்று கூறியிருந்தது. தமிழ்நாட்டில் இந்த தடுப்பூசியை மாணவிகளுக்கு செலுத்த உள்ளனர்.
நான் சொல்லும் இந்த கருத்து அரசியல் சம்பந்தப்பட்டது அல்ல. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் HPV தடுப்பூசி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், பல அரசியல் தலைவர்களும் தடுப்பூசிகள் இந்தியர்களுக்கு சிறந்த நன்மை பயக்கும் என்று கூறுகிறார்கள். நான் அரசியல்வாதிகளை குறை கூறவில்லை. என்னை போன்றவர்கள் தடுப்பூசிக்கு எதிராக பேசும்போது கடும் எதிர்ப்புகள் வருகின்றன.. அரசியல்வாதிகள் தடுப்பூசிக்கு எதிராக பேசினால் அது அரசியல் தற்கொலைக்கு சமமாகும். எனவே அவர் தடுப்பூசியை ஆதரிக்கிறார்கள்.
பலரின் கருத்து அதிக தடுப்பூசிகளுக்கு ஆதரவாக இருக்கும்போது, ஒரு அரசியல்வாதி இதை எதிர்த்துப் பேசுவது கடினம். ஆனால் நான் தடுப்பூசி பற்றி பேசுகிறேன். இது எனது வணிகத்திற்கோ அல்லது எனது தனிப்பட்ட பிம்பத்திற்கோ எந்த வகையிலும் உதவப்போவதில்லை. என்னுடைய நண்பர்கள் கூட எனது பாதுகாப்பு மற்றும் பிம்பம் குறித்து கவலைப்படுவதால், தடுப்பூசி பற்றிப் பேச வேண்டாம் என்று என்னிடம் அறிவுறுத்துகிறார்கள். நான் தடுப்பூசி பற்றி பேசுவதற்கு பின் எந்த உள்நோக்கமும் இல்லை.
மிக இளம் குழந்தைகளுக்கு அதிகமான தடுப்பூசிகளை செலுத்தி வருகிறோம் என்று நான் நம்புகிறேன். இதன் பொருள், நாம் அனைத்து தடுப்பூசிகளையும் நிறுத்த வேண்டும் என்பதல்ல. விமர்சகர்கள் எனது வார்த்தைகளை திரித்து கூற வேண்டாம். அதிகமாக தடுப்பூசிகளை பயன்படுத்த வேண்டாம் என்றுதான் கூறுகிறேன்.
என்னை அறிவியலில் அனுபவமில்லாதவர் என்று கருதும் மருத்துவர்கள் எனது கருத்தை மறுக்க வேண்டாம் என்னை போன்றவர்களின் குரல்களும் கேட்கப்பட வேண்டும் என்றும் ஸ்ரீதர் வேம்பு தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
வேம்பு தடுப்பூசிக்கு எதிராக வெளியிட்ட பதிவு
அவரது பதிவுகள் மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பெரும் கோபத்தை தூண்டியுள்ளன. வேம்பு அறிவியலுக்கு எதிராக பேசுகிறார். அவர் சர்ச்சைக்குரிய மூட நம்பிக்கையை பரப்ப நினைக்கிறார் என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. வேம்பு தடுப்பூசிக்கு எதிராக வெளியிட்ட பதிவு சர்ச்சையை கிளப்பியுள்ளது. சமூக வலைத்தளங்களில் அவரின் போஸ்டுக்கு கடுமையான எதிர்ப்பு அலை நிலவி வருகிறது.
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு இதற்கு எதிராக செய்துள்ள போஸ்டில், ஸ்ரீதர் வேம்பு எனும் சனாதன நச்சுக்கிருமி!
குழந்தைகளுக்கு அதிகளவு தடுப்பூசிகள் கொடுக்கப்படுவதால் தான் ஆட்டிசம் பாதிப்பு வருகிறது என்று சொல்லி தடுப்பூசிக்கு எதிராக பரப்புரை செய்யும் அமெரிக்க ஆய்வாளர் ஒருவரின் பதிவை பகிர்ந்துள்ள சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு இந்த ஆய்வை பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இளம் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் அதிகளவில் தரப்படுகின்றன. தடுப்பூசி போடும் நடைமுறை இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இதனால் ஆட்டிசம் பாதிப்பும் அதிகரித்து வருகிறது' என்று கருத்து தெரிவித்துள்ளார்.
அறிவியலுக்கு எதிரான ஸ்ரீதர் வேம்புவின் பிற்போக்குத்தனமான கருத்துக்கு மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் தங்களது கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
மூடநம்பிக்கைகளிலும் சடங்குகளிலும் பெரும்பான்மை மக்கள் மூழ்கியுள்ள இந்தியா போன்ற பழமைவாத நாட்டில், தடுப்பூசிகள் - அறிவியல் ஆய்வுகள் மூலம் கோடிக்கணக்கான மக்களை நோய் தொற்றுகளிலிருந்து குணமாக்கவும் - பாதுகாக்கவும் அரசுகள் போராடி வருகின்றன. இத்தகைய ஆபத்தான பிற்போக்கு கருத்துகள் நோய் தடுப்பு இயக்கத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும், என்று கூறி உள்ளார்.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications