மக்கள்தான் முக்கியம்.. 2.6 லட்சம் சதுர அடி.. சென்னையில் பிரம்மாண்ட மருத்துவமனை கட்டும் ZOHO நிறுவனம்
சென்னையில் 2.6 லட்சம் சதுர அடி நிலத்தில் பிரம்மாண்டமான மருத்துவமனை ஒன்றை கட்ட சென்னை காட்டாங்குளத்தூரில் இருக்கும் சோகோ (ZOHO) நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சென்னை: சென்னையில் 2.6 லட்சம் சதுர அடி நிலத்தில் பிரம்மாண்டமான மருத்துவமனை ஒன்றை கட்ட சென்னை காட்டாங்குளத்தூரில் இருக்கும் சோகோ (ZOHO) நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சென்னையில் இருக்கும் சோகோ (ZOHO) நிறுவனம் உலகம் முழுக்க மிகவும் பிரபலம் ஆகும். பல்வேறு ஆப்கள் தொடங்கி முக்கியமான தொழில்நுட்ப சேவைகளை இந்த தமிழ்நாட்டு நிறுவனம் உலக அளவில் செய்து வருகிறது.
சென்னைக்கு உள்ளே நுழையும் போதே கருப்பு நிறத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டு இருக்கும் வித்தியாசமான சோகோ (ZOHO) நிறுவன கட்டிடம்தான் எல்லோரையும் வரவேற்கும். தற்போது இந்த சோகோ (ZOHO) நிறுவனம் மக்களுக்கு மருத்துவ ரீதியாக உதவ பெரிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.

மருத்துவமனை உதவி
அந்த வகையில் சென்னையில் 2.6 லட்சம் சதுர அடி நிலத்தில் பிரம்மாண்டமான மருத்துவமனை ஒன்றை கட்ட சென்னை காட்டாங்குளத்தூரில் இருக்கும் சோகோ (ZOHO) நிறுவனம் முடிவு செய்துள்ளது. காட்டாங்குளத்தூர் அருகே இந்த மருத்துவமனை கட்டப்பட உள்ளது. மொத்தம் இந்த மருத்துவமனை சிகிச்சை அளிக்கும் பெட்கள் அடங்கிய பகுதி மட்டும் 1000 சதுர அடியில் கட்டப்பட உள்ளது.

வசதிகள் கொண்டது
முழுக்க முழுக்க தனிமைப்படுத்தப்படும் வசதிகளை கொண்டு இந்த மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. தனித்தனி அறைகளில் இந்த பெட்கள் இருக்கும். மொத்தமாக 250 பெட்கள் இருக்கும் வகையில் முதற்கட்டமாக இந்த மருத்துவமனையை அமைக்க உள்ளனர். இதற்காக முதற்கட்டமாக 70 கோடி ரூபாயை செலவு செய்ய இருக்கிறார்கள்.

திறக்க உள்ளனர்
மொத்தம் 12-16 மாதங்களில் இந்த பணிகள் அனைத்தையும் திறக்க உள்ளனர். சென்னைக்கு வெளியே அதை சுற்றி இருக்கும் மக்களின் மருத்துவ தேவைகளை கருத்தில் கொண்டு இந்த மருத்துவமனை உருவாக்கப்பட உள்ளது.மக்களுக்கு உதவும் வகையில் முழுக்க முழுக்க அதை மட்டுமே நோக்கமாக கொண்டு இந்த மருத்துவமனையை கட்ட இருக்கிறார்கள்.

என்ன கட்டணம்
மிக குறைந்த கட்டணத்தில் தரமான மருத்துவமனையை இவர்கள் உருவாக்க உள்ளனர். நகரம், கிராமம் இடையே இருக்கும் வேறுபாட்டை களையும் வகையில் இந்த மருத்துவமனையை உருவாக்க உள்ளனர். அதேபோல் இங்கு மிக குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கவும, விற்பனை செய்யவும் முடிவு செய்து இருக்கிறார்கள். ZOHO நிறுவனத்தின் இந்த திடீர் முடிவு பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications