சோமேட்டோ நிறுவனத்தின் சிஇஓ பதவி விலகுகிறார்.. இதுதான் காரணமா? சோமேட்டோ புது CEO யார் தெரியுமா?
சென்னை: சோமேட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த தீபிந்தர் கோயல், தன்னுடைய பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.. புதிய மற்றும் அதிக ரிஸ்க் கொண்ட சோதனையான திட்டங்களில் கவனம் செலுத்துவதற்காக தீபிந்தர் கோயல் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோமேட்டோ என்பது இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் உணவு டெலிவரி சேவைகளில் ஒன்றாகும். ஆரம்பத்தில், ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரெண்ட்களில் கிடைக்கும் உணவின் மெனு, விலை விவரங்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் கருத்துகளை ஆன்லைனில் வழங்கும், தளமாகத்தான் இது தொடங்கப்பட்டது.

புகழ்பெற்ற சோமேட்டோ உணவு டெலிவரி நிறுவனம்
இதற்கு பிறகுதான் உணவு டெலிவரி, குவிக் காமர்ஸ், ஹோட்டல்களுக்கு நேரடி உணவு பொருள் விநியோகம் மற்றும் டிக்கெட் முன்பதிவு போன்ற பல சேவைகளாக இது விரிவடைந்தது.
2008ம் ஆண்டு தீபிந்தர் கோயல் மற்றும் பங்கஜ் சந்தா ஆகியோர் இணைந்து தொடங்கிய இந்த நிறுவனம், இன்று இடர்னல் (Eternal ) என்ற நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. Eternal நிறுவனத்தின் கீழ் Zomato, Blinkit, Hyperpure, District போன்ற முக்கியமான வணிக பிரிவுகள் உள்ளன. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள Eternal, இந்தியாவின் முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது.
சோமேட்டோ சிஇஓ
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான இந்த சோமேட்டோவின் Eternal நிறுவனத்தின் CEO தீபிந்தர் கோயல் தன்னுடைய பதவியில் இருந்து விலகி உள்ளார்.. அதாவது 2026 பிப்ரவரி 1 முதல் தனது பதவியில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார். இந்த தகவலை நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
தீபிந்தர் கோயல் ராஜினாமாவைத் தொடர்ந்து, அவரது இடத்தில் Blinkit நிறுவனத்தின் CEO ஆக உள்ள அல்பிந்தர் திந்த்சா புதிய CEO ஆக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாற்றம் நிறுவனத்தின் வளர்ச்சியை ஒருபோதும் பாதிக்காது என்கிறது Eternal நிறுவனம்..
விளக்க கடிதம்
தீபிந்தர் கோயல் தனது ராஜினாமா குறித்து பங்குதாரர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.. அந்த கடிதத்தில் ராஜினாமாவுக்கான காரணத்தையும் விளக்கமாக சொல்லி உள்ளார்..
அதில், "சமீப காலமாக, புதியதும் அதிக ஆபத்து உள்ளதும் ஆன சில யோசனைகள் மீது எனக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது... அந்த யோசனைகளை செயல்படுத்த பெரிய அளவிலான சோதனைகள் மற்றும் ஆய்வுகள் தேவைப்படும்...
ஆனால் Eternal போன்ற பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனம் என்றால், முதலீட்டாளர்கள் மற்றும் சட்ட விதிமுறைகளுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். இவ்வகை நிறுவனங்களில், அதிக ஆபத்து உள்ள புதிய முயற்சிகளை செய்வது சரியானது அல்ல ..
அந்த புதிய யோசனைகள் Eternal நிறுவனத்தின் தற்போதைய வணிகம் மற்றும் செயல்பாடுகளுடன் பொருந்தவில்லை.., அதனால்தான், நிறுவனத்தின் நிலையான வளர்ச்சியை பாதிக்காமல் பாதுகாக்க, அந்த முயற்சிகளை நிறுவனத்திற்கு வெளியே இருந்து செய்ய முடிவு எடுத்துள்ளேன்.. இதன் காரணமாகவே, CEO பதவியில் இருந்து விலகுவது தான் நிறுவனத்துக்கும் தன்னுடைய புதிய முயற்சிகளுக்கும் சரியான முடிவு" என்று தன்னுடைய விளக்க கடிதத்தில் தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.
புதிய சிஇஓ பதவியேற்பு
இதையடுத்து, பிளிங்கிட் நிறுவனத்தின் தற்போதைய சிஇஓ அல்பிந்தர் சிங் திண்ட்ஸா பிப்ரவரி 1 முதல் எடர்னல் நிறுவனத்தின் புதிய சிஇஓ-வாகப் பொறுப்பேற்பார் என தெரிகிறது... இதனிடையே, இந்த அறிவிப்புக்குப் பிறகு, Eternal நிறுவனத்தின் பங்கு விலை 4.90 சதவீதம் உயர்ந்து, ரூ.282.80 ஆக முடிவடைந்துள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு சுமார் 2.57 லட்சம் கோடி ரூபாய் ஆக உயர்ந்துள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications