இனி கவலையை விடுங்க! ரயிலிலும் விதவிதமாக ஆர்டர் போட்டு சாப்பிடலாம்.. சோமாட்டோவில் புது வசதி
சென்னை: பிரபல உணவு விநியோக நிறுவனமான சோமாட்டோ ஐஆர்சிடிசியுடன் கை கோர்த்துள்ளது. 100 ரயில் நிலையங்களில் பயணிகள் ரயிலில் இருந்தபடியே ஆர்டர் செய்ய முடியும் எனவும் சோமாட்டோ டெலிவரி ஊழியர்கள் இருக்கும் இடத்திற்கே வந்து உணவு டெலிவரி செய்வார்கள் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொலை தூர ரயில்களில் செல்லும் பயணிகள் முதலில் எதிர்கொள்ளும் பிரச்சினை உணவுதான். சில பயணிகள் குடும்பத்துடன் பயணித்தால் வீட்டில் இருந்து சாப்பாட்டை கட்டி எடுத்து சென்று விடுவார்கள். சிலரோ செல்லும் வழியில் தங்களது ஃபேவரைட் ஹோட்டல்களில் உணவை பார்சல் வாங்கி கொண்டு சென்று விடுவார்கள்.

ரயில்களில் கேட்டரிங் வசதி இருந்தாலும் கூட பெரும்பாலான பயணிகள், வீட்டில் இருந்து எடுத்து செல்வதைத்தான் விரும்புவார்கள். சில நேரங்களில் நேரமின்மை காரணமாக உணவு எடுத்து செல்ல முடியாத நிலை உள்ளது அதேபோல தனியாக செல்பவர்களும் வரும் வழியில் உணவை வாங்கி கொள்ளலாம் என நினைத்துக்கொண்டு பயணத்தை தொடங்கி விடுவார்கள். ரயில்களில் பயணம் செய்யும் போது நினைத்த உணவை எல்லாம் வாங்கி சாப்பிட முடியாத ஒரு நிலைதான் இருந்து வருகிறது.
இதனை போக்கும் விதமாகத்தான் பிரபல உணவு டெலிவரி நிறுவனம் சோமாட்டோ ரயில்வேயுடன் கை கோர்த்துள்ளது. ரயில்களில் இருந்தபடியே ஆர்டர் செய்யும் வசதியை சோமாட்டோ கொண்டு வந்துள்ளது. இந்த வசதி மூலம் பயணிகள் தங்களுக்கு பிடித்த உணவை ரயிலில் பயணித்தபடியே ஆர்டர் செய்து கொள்ள முடியும். தற்போது இந்த வசதி 88 நகரங்களில் உள்ளது.
ரயில்வே உணவு கழகம் (ஐஆர்சிடிசி)யுடன் இணைந்து இந்த சேவை தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 10 லட்சத்திற்கு மேற்பட்ட ஆர்டர்களை முடித்துள்ளதாக சோமாட்டோ சிஇஓ ராகேஷ் ரஞ்சன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "ஐஆர்சிடிசியுடன் இணைந்து உணவு டெலிவரி செய்வது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த சேவை லட்சக்கணக்கான பயணிகளுக்கும் விரிவடையும் என்ற நம்பிக்கை உள்ளது.
'Zomato - Food Delivery in Trains என்ற ஆப்ஷன் வழியாக வாடிக்கையாளர்கள் உணவை ஆர்டர் செய்து கொள்ள முடியும். ரயில் நிலையத்தில் இருந்து கொண்டும் ஆர்டர் செய்யலாம். அல்லது ரயிலில் பயணம் செய்யும் போதும் ஆர்டர் செய்யலாம். வாடிக்கையாளர்கள் தங்கள் சோமாட்டோ செயலியில் ரயில் என சேர்ச் செய்ய வேண்டும். ரயில்வே ஸ்டேஷனில் இருந்தால் வாடிக்கையாளர்கள் தங்கள் லொகேஷனை அப்டேட் செய்து கொள்ளலாம்.
சென்னையில் புதுசாக விட்ட தாழ்தள பஸ்களை மொத்தமாக மாற்ற எம்டிசி முடிவு.. பயணிகளுக்கு நல்ல செய்தி
அதன்பிறகு பயணிகளின் பி.என்.ஆர் எண் கேட்கும். அதில் அந்த எண்ணை கொடுத்தால் தானாகவே பயணி செல்லும் ரயில் மற்றும் இருக்கை குறித்த விவரங்களை பெற்று விடும். பயணிகள் ஆர்டர் செய்த பிறகு குறிப்பிட்ட ரயில் நிலையத்திற்கு ரயில் வந்ததும் பயணிகள் ஸ்டேஷன்களில் சோமாட்டோ டெலிவரி மேனிடம் ஆர்டரை பெற்றுக்கொள்ளலாம். ஒருவேளை ரயில் தாமதம் ஆனாலும் கூட சோமாட்டோ ரயில் நேரத்தை டிராக் செய்து டெலிவரியை அதற்கேற்ப சரியான நேரத்தில் வழங்கிவிடும்" என்று தெரிவித்தார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு சோதனை அடிப்படையில் இந்த சேவையை சோமாட்டோ துவங்கியது. டெல்லி, பிரக்யாராஜ், கான்பூர், லக்னோ, வாரணாசி ஆகிய ஐந்து ரயில் நிலையங்களில் சோதனை அடிப்படையில் துவங்கப்பட்ட இந்த சேவை தற்போது 100 ரயில் நிலையங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக சோமாட்டோ தெரிவித்துள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications