இவ்ளோ கியூவா.. பெட்ரோல் போட லேட்டாகிடும் போலயே! குதிரையில் உணவு டெலிவரி செய்த ஜொமாட்டோ ஊழியர்
சென்னை: லாரி ஓட்டுநர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் ஹைதராபாத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து ஜொமாட்டோ ஊழியர் ஒருவர் குதிரையில் போய் உணவு டெலிவரி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சாலை விபத்துகளை ஏற்படுத்தும் போது லாரிகள், டேங்கர் லாரிகளின் ஓட்டுநர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்காமல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டால் அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ 7 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது.

இதற்கு எதிர்பபு தெரிவித்து லாரி ஓட்டுநர்கள் ஹைதராபாத்தில் கடந்த 3 நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து மத்திய அரசு அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.
அவர்களிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் செவ்வாய்க்கிழமை இரவு சுமூக தீர்வு எட்டப்பட்டது. இந்த நிலையில் பெட்ரோல் பங்கில் நீண்ட நேரமாக காத்திருந்தும் பெட்ரோல் கிடைக்காததால் நேரத்திற்கு உணவு டெலிவரி செய்தாக வேண்டுமே என்பதால் ஜொமாட்டோ நிறுவன ஊழியர் குதிரை மீது சவாரி செய்தபடியே கடந்த இரு நாட்களாக உணவு டெலிவரி செய்து வருகிறார்.
ஹைதராபாத்தில் உள்ள சஞ்சல்கூடா பகுதியில் இவர் குதிரையில் சவாரி செய்து உணவு டெலிவரி செய்யும் வீடியோவை மக்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications