அடக்கடவுளே.. இந்தக் கொடுமையை என்னனு சொல்ல.. குரங்கையும் ‘இந்த’ ஆசை விட்டு வைக்கலையே!
சிம்பன்ஸி செல்போன் பயன்படுத்தும் வீடியோ வைரலாகியுள்ளது.
லண்டன்: சிம்பன்ஸி ஒன்று சாதாரணமாக மனிதர்களைப் போல் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பயன்படுத்தும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
ஸ்மார்ட்போன்களுக்கு குழந்தைகள், பெரியவர்கள் தான் அடிமையாகி கிடக்கின்றனர் என்றால், விலங்குகளையும் அந்த மோகம் விட்டு வைக்கவில்லை. சில இடங்களில் செல்பிக்கு குரங்குகள் போஸ் கொடுக்கும் செய்தி நாம் அறிந்தது தான்.
இந்நிலையில், மனித குரங்கு ஒன்று செல்போனை அசாத்தியமாக பயன்படுத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் பலராலும் ஆச்சர்யம் மற்றும் அதிர்ச்சி கலந்து பகிரப்பட்டு வருகிறது.
|
சிம்பன்ஸி வீடியோ:
இந்த வீடியோவை மைக் ஹோல்ஸ்டன் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் மனித குரங்கு ஒன்று ஸ்மார்ட் போனில் இன்ஸ்டாகிராம் சமூகவலைதளப் பக்கத்தை மனிதர்களைப் போல் பயன்படுத்துகிறது. தனக்கு தேவையான படங்கள் மற்றும் வீடியோக்களை தானே தேர்வு செய்து பார்க்கிறது.

இணையத்தில் வைரல்:
இந்த வீடியோவை இதுவரை 15 லட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர். டிவிட்டரில் சுமார் 6 லட்சம் மக்கள் பார்வையிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விலங்கு நல ஆர்வலர்கள் கவலை:
மனிதர்களைப் போல் குரங்குகளையும் ஸ்மார்ட்போன் ஆக்கிரமித்து விட்டதே எனப் பலர் கவலை தெரிவித்துள்ளனர். சிலர் மீம்ஸ் தயாரித்தும் வெளியிட்டுள்ளனர். ஆனால், ‘சிம்பன்ஸி மீது அக்கறையுள்ளவரகளால் இதை மகிழ்ச்சியாக பார்க்க முடியாது. அதன் உண்மையான மகிழ்ச்சியை கொன்று விட்டோம்' என விலங்கு நல ஆர்வலர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

கோபம்:
அதோடு, காட்டு விலங்கினங்களை வீட்டில் வைத்து வளர்க்க விரும்பினால் அதன் விளைவு இப்படித்தான் இருக்கும் எனவும் அவர்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களின் வாழ்விடங்களை நல்லபடியாக அமைத்துக் கொடுப்பது மட்டுமே விலங்குகளைக் காப்பதற்காக தீர்வாக இருக்கும்' என்பதே அவர்களது கருத்து.












Click it and Unblock the Notifications