42 பயணிகளை சென்னையில் தவிக்க விட்டுச் சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்... விமான டிக்கெட் கட்டணம் அம்போ..!
சென்னை: சென்னையில் இருந்து கொழும்பு வழியாக துபாய் செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 42 பயணிகளுக்கு திடீரென அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் அனைவரும் சென்னை விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர்.
Recommended Video
கொரோனா இருக்கிறதா என்பதை கண்டறிவதற்கான ஆர்.டி.பிசிஆர் சோதனை செய்து அதற்கான சான்றிதழ் தங்களிடம் இருந்தும், ரேபிட் டெஸ்ட் சான்றிதழ் இருந்தால் தான் விமானத்தில் அனுமதிப்போம் என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பணியாளர்கள் கூறிவிட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே இந்த விவகாரத்தின் முழு விவரத்தை விமானத்தில் அனுமதி மறுக்கப்பட்ட பயணி ஒருவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

மேட்டூர் டூ துபாய்
''என் பெயர் நாகராஜ், நான் சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து துபாய்க்கு செல்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ரூ.20,000 கொடுத்து டிக்கெட் பதிவு செய்திருந்தேன். டிக்கெட் முன் பதிவு செய்யும் போது ரேபிட் டெஸ்ட் கட்டாயம் என்ற தகவலை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தெரிவிக்கவில்லை. அந்த சோதனை கட்டாயம் என்றால் அது குறித்த தகவலை டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே எங்களுக்கு சுட்டிக்காட்டி இருக்கலாம்.''

6 மணி நேரம்
''அப்போதெல்லாம் விட்டுவிட்டு திடீரென ரேபிட் டெஸ்ட் சான்றிதழ் இருந்தால் தான் விமானத்தில் ஏற்றுவோம் எனக் கூறி நான் உட்பட 42 பயணிகளை தவிக்கவிட்டு விட்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு சென்று விட்டது. ரேபிட் டெஸ்ட் சோதனையை பொறுத்தவரை 6 மணி நேரம் தான் அதற்கு மதிப்பு, நாங்கள் இங்கிருந்து கொழும்பு சென்று அதற்கு பிறகு துபாய் செல்வதற்குள் 6 மணி நேரத்துக்கும் மேலாகிவிடும். இது குறித்து எவ்வளவோ எடுத்துக்கூறியும் எங்களை விமானத்திற்குள் அனுமதிக்கவில்லை.''

பதில் இல்லை
''கட்டிட வேலைக்கு செல்வோர் முதல் தொழில் நிமித்தமாக செல்வோர் வரை 42 பேர் இப்போது சென்னை விமானத்தில் இருக்கிறோம். இங்குள்ள எந்த அதிகாரியும் உருப்படியாக பதில் அளிக்கவில்லை. எங்கள் டிக்கெட் கட்டணத்தை ஏஜெண்ட்கள் எப்படியும் திருப்பிக் கொடுக்கமாட்டார்கள். இதனால் என்ன செய்வது எனத் தெரியாமல் 42 பேரும் சென்னை விமான நிலையத்தில் இருக்கிறோம். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இவ்வளவு மோசமாக நடந்துகொள்ளும் என எனக்குத் தெரியாது, எங்களை துபாய்க்கு அழைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு அந்த நிறுவனத்துக்கு தான் உள்ளது.''

என்ன நியாயம்
''இதனிடையே இதே ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் கொச்சியில் இருந்து துபாய்க்கு பயணிகளை அழைத்துச் சென்ற போது அங்கு பயணிகளிடம் ரேபிட் டெஸ்ட் சான்றிதழ் கேட்கவில்லை. கேரள பயணிகளுக்கு ஒரு நியாயம், தமிழக பயணிகளுக்கு ஒரு நியாயம் என்ற வகையில் இந்த நிறுவனம் செயல்படுவதாக கருதுகிறேன்.''
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications