அவங்க காக்கி யூனிபார்ம்ல இருக்காங்க! உங்க ஐடி கார்டு எங்கே? இன்ஸ்பெக்டரிடம் எகிறிய நடிகர் விநாயகன்
கொச்சி: சிகரெட் பிடித்து புகையை போலீஸ்காரர் முகத்தில் ஊதியபோது நடிகர் விநாயகனுக்கு அபராதம் விதித்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களை ஜெயிலர் பட வில்லன் தாறுமாறாக பேசியுள்ளது வீடியோவில் தெரியவந்துள்ளது.

நடிகர் விநாயகன், தமிழ், மலையாள படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் திமிரு என்ற படத்தில் அறிமுகமானார். பின்னர் காளை, சிலம்பாட்டம், மரியான் போன்ற படங்களில் நடித்துள்ளார். அண்மையில் நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
வர்மன் என்ற கதாபாத்திரத்தில் மலையாளம் கலந்த தமிழில் பேசி விநாயகன் மிரட்டியிருப்பார். இந்த நிலையில் கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் நடிகர் விநாயகன் கைது செய்யப்பட்டு நேற்று இரவு 10.30 மணிக்கு விடுவிக்கப்பட்டார்.
இதுகுறித்து நடந்தது என்ன என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கலூர் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் அருகே விநாயகனுக்கு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு தனது மனைவியுடன் சண்டை என்பதால் தீர்த்து வைக்குமாறு போலீஸாரை அழைத்துள்ளார். போலீஸாரும் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
அப்போது இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட போலீஸார் இது அவர்களின் குடும்பத் தகராறு என அறிந்தவுடன் மீண்டும் காவல் நிலையத்திற்கு சென்றனர். அவர்களை பின்தொடர்ந்தவாரே விநாயகன் போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு இன்ஸ்பெக்டரிடம் நீங்கள் ஒரு பக்கத்து நியாயத்தை மட்டும் கேட்டுவிட்டு சென்றுவிட்டீர்கள்.
அதாவது பெண்கள் என்ன சொல்கிறார்களோ அதை கேட்டுவிடுவீர்களா, என் பக்கம் என்ன இருக்கிறது என ஆராயமாட்டீர்களா என கேட்டுள்ளார். இதையடுத்து எல்லாரும் போலீஸ் உடை அணிந்துள்ளார்கள், நீங்கள் மட்டும் ஏன் கலர் உடை அணிந்துள்ளீர்கள், உங்கள் ஐடி கார்டு எங்கே என கேட்டுள்ளார். இதையடுத்து சிறிது நேரம் கழித்து அங்கேயே சிகரெட் பிடித்த விநாயகன் புகையை அந்த இன்ஸ்பெக்டர் முகத்தில் ஊதியுள்ளார்.
இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து மருத்துவ பரிசோதனைக்காக எர்ணாவூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் மது குடித்திருந்தது சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து இரவு 10.30 மணிக்கு போலீஸார் தங்களுடைய ஜாமீனில் விநாயகத்தை வெளியே அனுப்பினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பனை விவசாயியை எஸ்.ஐ இசக்கிராஜா சுட்ட வழக்கு.. சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு! -
சட்டம் ஒழுங்கில் பெரிய ஓட்டை.. நாமக்கல்லில் தலைதூக்கிய துப்பாக்கி கலாச்சாரம்! 20 சவரன் நகை அபேஸ்! -
கயத்தாறு சம்பவம்.. ஆணவக்கொலை அல்ல! காவல்துறை அளித்த விளக்கம்! வதந்தி பரப்ப வேண்டாம் என வார்னிங் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications