ஒரே சம்பவம்.. மொத்த இந்தியாவையும் பதற வைத்தவர் சிக்கினார்.. கேரள ரயில் தீ வைப்பில் திருப்பம்
கொச்சி: கேரளா மாநிலம் கோழிக்கோடு அருகே ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த சம்பவம் தொடர்பாக தாக்குதல் நடத்திய ஷாருக் சைஃபி என்பவர் மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிராவின் ரத்தினகிரி பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற போது ஷாருக் ஷபி சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.
ஷாருக் ஷபியை கைது செய்த மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரத்னகிரி
இதற்கிடையே கேரள தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார், ரத்தினகிரி விரைந்துள்ளனர். தீ வைத்த ரயிலிலேயே ஷாருக் கண்ணூருக்கு சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்ணூரில் இருந்து மங்களூர் வழியாக ரத்தினகிரிக்கு சென்றதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தப்பி ஓட்டம்
அப்போது பெட்ரோல் பட்டு பயணிகள் சிலருடைய ஆடையிலும் தீப்பிடித்துள்ளது. அதை பார்த்த மற்ற பயணிகள் உடனடியாக அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி உள்ளார்கள். அந்த மர்ம நபர் வெளியில் குதித்து தப்பியோடியதாக கூறப்படுகிறது.

தீவிர விசாரணை
இதனிடையே தீயை பயணிகளே அணைத்துவிட்டு ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ரயில்வே போலீஸார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் விரைந்து வந்தனர். அப்போது, தண்டவாளத்தில் கிடந்த ஒரு பையைக் கைப்பற்றினர். அதில் இன்னொரு பெட்ரோல் பாட்டில் மற்றும் 2 மொபைல் போன்கள் இருந்துள்ளன. அந்த பை தப்பியோடிய மர்ம நபருடையதா என்று போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

சடலமாக மீட்பு
இதற்கிடையில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் ரயில் தண்டவாளத்தில் இருந்து பச்சிளம் குழந்தை, ஆண், பெண் என 3 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இறந்தவர்கள் தவுபிக் மற்றும் ரெஹனா என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். மூன்று பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் டி1 பெட்டியில் பரவிய தீயில் இருந்து தப்பிக்க ரயிலில் இருந்து வெளியில் குதித்து உயிரிழந்தனர். தீக்காயம் அடைந்த 8 பயணிகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

உருவப்படம்
பயணிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் உருவப்படம் வரையப்பட்டு குற்றவாளி என சந்தேகிக்கப்பட்ட நபரை கேரள போலீசாரும், என்ஐஏ அதிகாரிகளும் தீவிரமாக தேடி வந்தனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று ஒரு நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய பின்னர் , கேரள சம்பவத்திற்கு தொடர்பு இல்லை என்பது தெரிய வந்தது. இதை எடுத்து அவரை மாலையில் விடுவித்தனர்.

சிக்கியது எப்படி?
கோழிக்கோடு அருகே ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த சம்பவம் தொடர்பாக தாக்குதல் நடத்திய ஷாருக் சைஃபி என்பவர் மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவின் ரத்தினகிரி பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற போது ஷாருக் ஷபி சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர். ஷாருக் ஷபியை கைது செய்த மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications