சபரிமலையில் தங்கமுலாம் பூசும் செலவை ஏற்ற தொழிலதிபருக்கு நிரந்தர வருவாயே இல்லை! தேவஸ்வம் போர்டு ஷாக்
கொச்சி: சபரிமலையில் தங்கமுலாம் பூசும் பணிகளுக்கான செலவை ஏற்ற தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவருக்கு நிரந்தரமான எந்த வருவாயும் இல்லை என்று திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு ஊழல் கண்காணிப்பு பிரிவு இறுதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் இருமுடி கட்டிக் கொண்டு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

இந்த கோயிலை திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு நிர்வகித்து வருகிறது. இந்த கோயிலில் துவாரபாலகர்கள் சிலையில் இருந்து 4 கிலோ தங்கம் மாயமானதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில் இது தொடர்பாக 9 தேவஸ்வம் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தங்கமுலாம் பூசும் செலவை கர்நாடகா மாநிலத்தை பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
தங்கம் மாயம் குறித்த விவகாரத்தில் கேரள உயர்நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்தி வருகிறது. அது போல் தேவஸ்வம் போர்டு சார்பில் ஊழல் கண்காணிப்பு பிரிவும் விசாரணை நடத்தி வருகிறது.
இது குறித்த இறுதி அறிக்கையை கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவரின் வருவாய் குறித்து பட்டய கணக்காளரை வைத்து ஆய்வு செய்தோம். அதில் அவருக்கு நிரந்தரமான வருவாய் ஏதும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
கோயில் கருவறை கதவுக்கு தங்க முலாம் பூசும் செலவை போத்தி ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால் உண்மையில் அதற்கான செலவை செய்தது கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த கோவர்தனன், அஜித்குமார் ஆகிய இரு தொழிலதிபர்கள்தான்.
அதே வேளையில் உன்னிகிருஷ்ணன் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சில நன்கொடைகளை வழங்கியுள்ளார். அவரது செலவில் நிகழ்ந்த பல்வேறு பணிகள் விரிவாக விசாரிக்கப்பட வேண்டியது அவசியம் என அந்த இறுதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
துவாரபாலகர்கள் சிலைகள், கோயில் கதவுகளில் தங்கம் மாயமானது தொடர்பான அந்த இரு வழக்குகளிலும் தொழிலதிபர் போத்தி பெயரே முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேவஸ்வம் போர்டு அதிகாரி பிரசாந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சொந்தமான சிறு துண்டு தங்கத்தையும் திருட்டு போக விட மாட்டோம். 1998ஆம் ஆண்டு விஜய் மல்லையா வழங்கிய தங்கம் தொடர்பாக விசாரணை நடக்கட்டும். சிறப்பு விசாரணைக் குழு முழுமையாக விசாரிக்கட்டும்.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் உள்ள அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஓய்வு பெற்ற ஊழியர்களாக இருந்தால் விசாரணை முடிவு வந்ததும் அவர்களின் பென்ஷன் நிறுத்தப்படும் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். சபரிமலை தொடர்பாக மர்மமான கதைகள் கூறுவதற்கு முடிவு ஏற்பட வேண்டும்.
உன்னிகிருஷ்ணனிடம் துவார பாலகர்களின் தங்கக் கவசங்களை கொடுத்தனுப்ப வேண்டும் என நான் கூறவில்லை. அப்படியே நான் கொண்டு செல்லக் கூறியதாக நிரூபித்தால் உடனே ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன். 2024 ஆம் ஆண்டு அவரிடம் தங்கக் கவசங்களை கொடுத்தனுப்ப வேண்டாம் என்றுதான் கூறினேன். சபரிமலையில் இருந்து எடுத்துச் சென்ற அனைத்து தங்கங்களையும் மீட்போம்" என்று தெரிவித்திருந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications