வா விளையாடலாம்.. சிறுமியை அழைத்து சீரழித்த முதியவர்.. சாகும் வரை சிறை தண்டனை.. கோர்ட் அதிரடி!
12 வயது சிறுமியை சீரழித்த முதியவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
கோவை: "வா விளையாடலாம்" என்று சிறுமியை அழைத்து பலமுறை நாசம் செய்த முதியவருக்கு சாகும்வரை ஜெயில் தண்டனை கிடைத்துள்ளது.
பொள்ளாச்சியை அடுத்த நெகமத்தில் வசித்து வந்த கூலித் தொழிலாளி ஆறுச்சாமி.. 57 வயதாகிறது.. 2 மனைவிகள்.. 2 பேருமே ஆறுமுகசாமியை விட்டு போய்விட்டனர். அதனால், இவர் தனியாகத்தான் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், பக்கத்து வீட்டில் ஒரு குடும்பம் வசித்து வந்தது.. பெற்றோர் வேலைக்கு போய்விட்டால், 12 வயது சிறுமி மட்டும் தனியாக இருப்பாள்.
அதனால் ஆறுமுகசாமி, "வா விளையாடலாம்" என்று தன் வீட்டுக்கு கூப்பிட்டு வந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.. சில சமயம் சமைத்து தருகிறேன்என்று சொல்லி அழைத்து வந்தும் பாலியல் கொடுமை செய்து வந்துள்ளார்.
பலமுறை இப்படியே செய்யவும், ஒருநாள் சிறுமிக்கு அடிவயிறு அதிகமாக வலித்தது.. இதனால் பயந்துபோன பெற்றோர் சிறுமியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பார்த்தனர்.. அப்போதுதான் சிறுமி 4 மாத கர்ப்பம் என்று தெரியவந்தது.
இதை கேட்டு அதிர்ந்த அவர்கள் உடனடியாக பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் தந்தனர்.. போக்சோவில் ஆறுச்சாமியையும் கைது செய்தனர். 2017-ல் நடந்த இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை கோவை மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.. அனைத்து விசாரணையும் நடந்து முடிந்த நிலையில் தீர்ப்பும் தரப்பட்டுள்ளது.
ஆறுச்சாமி குற்றவாளி என்பது நிரூபணமாகி உள்ளதால், ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதாவது, ஆறுச்சாமி இயற்கை முறையில் உயிரிழக்கும் வகையில் ஜெயில் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.1,000 அபராதம், சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு கோவை மகளிர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த கோவை மாநகர காவல் ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்த தீர்ப்பின் நகலை இருவருக்கும் அனுப்பி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications