வேகமெடுக்கும் சவுக்கு சங்கர் வழக்கு..புயல் வேகத்தில் சைபர் கிரைம் கிரைம் போலீஸ்! அடுத்தடுத்து ஆக்சன்
கோவை: பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் தற்போது நீதிமன்ற ஜாமினில் வெளியே உள்ளார். இந்த நிலையில் சவுக்கு சங்கர் தொடர்பான ஒரு வழக்கில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிதாக பதியப்பட்ட 15 வழக்குகள் தொடர்பாக தனித்தனி குற்றப்பத்திரிகைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மேலும் கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
சவுக்கு சங்கர் தேனி சென்றிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து தேனி சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்து காவல்துறை வாகனத்தில் கோவை அழைத்து சென்றனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சவுக்கு சங்கர் மீது தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர் மீது கஞ்சா வழக்கு, பெண் காவலர்கள் அளித்த புகாரின் பேரில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகின. இதனையடுத்து சங்கர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் சவுக்கு சங்கர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள், சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர். இந்த நிலையில் சங்கர் மீதான பல்வேறு வழக்குகளில் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து அவர் ஜாமீனில் வெளி வந்தார்.
இதற்கிடையே தன் மீது பதியப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ஒரே நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என சவுக்கு சங்கர் கோரிக்கை விடுத்தார். இதை அடுத்து கோவை நீதிமன்றத்திற்கு அனைத்து வழக்குகளும் மாற்றப்பட்டது. தொடர்ந்து கோவை சைபர் கிரைம் காவல் துறையினர் சவுக்கு சங்கருக்கு எதிராக 15 புதிய வழக்குகளையும் பதிவு செய்தனர். தற்போது சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அவர் மீது கூடுதலாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது.
சவுக்கு சங்கர் மீது ஜேஎம் - 4 நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை பெற்று வரும் நிலையில் முதல் வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிதாக பதியப்பட்ட வழக்குகள் தொடர்பாக குற்ற பத்திரிகைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு குற்ற பத்திரிக்கையும் தனித்தனியாக விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.
இதுவரை 130க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நிறைவடைந்திருக்கும் நிலையில் இன்னும் 20க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் சாட்சிகள், விசாரித்தவர்கள், புகார் கொடுத்தவர்கள் என அடுத்தடுத்த விசாரணை முடிக்கப்பட்டு சவுக்கு சங்கரிடம் தேவைப்பட்டால் விசாரணை நடத்தப்படும் எனவும் கோவை சைபர் கிரைம் போலீசார் கூறியுள்ளனர்.
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications