8 வயசு பொண்ணு.. பையன் வயசு 16.. காட்டுக்குள்ள அட்டூழியம்.. மிரண்டு போன கோவை!
8 வயது சிறுமியிடம் அத்துமீறிய 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
கோவை: பையன் வயசு 16.. பொண்ணு வயசு 8... காட்டுக்குள்ள நடந்த அட்டூழியத்தை நினைத்து கோவையே மிரண்டு கிடக்கிறது!
கோவை சேரன் மாநகர் பகுதியில் வசித்து வருபவர் அந்த கூலி தொழிலாளி... இவர் ஆடுகளையும் வீட்டில் வைத்து வளர்த்து வருகிறார்.. அந்த ஆடுகளை அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது வழக்கம்.

இவரது மகளுக்கு 8 வயசுதான் ஆகிறது.. அங்குள்ள பள்ளி ஒன்றில் 4-ம் வகுப்பு படித்து வருகிறாள். இப்போது லாக்டவுனில் ஸ்கூல் லீவு என்பதால் வீட்டில் இருந்திருக்கிறாள்.. சம்பவத்தன்று, வீட்டில் உள்ள ஆடுகளை மேய்ப்பதற்காக காட்டு பகுதிக்கு சென்றாள்.
அப்போது 16 வயசு சிறுவன் அங்கு வந்துள்ளான்.. காட்டுக்குள் யாருமே இல்லாததை பார்த்ததும், அந்த சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை தந்திருக்கிறான்.. அவனிடமிருந்து தப்பித்து வந்த சிறுமி அழுது கொண்டே வீட்டுக்கு வந்து நடந்ததை எல்லாம் பெற்றோரிடம் சொன்னாள்.
குழந்தை சொல்வதை கேட்டு அதிர்ந்த பெற்றோர் 16 வயது சிறுவன் மீது பீளமேடு ஸ்டேஷனில் புகார் தந்தனர்.. அந்த புகாரின் பேரில் போலீசார் சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறுவர் சீர்த்திருத்த பள்ளியிலும் சேர்த்தனர். அந்த சிறுவன் அதே பகுதியை சேர்ந்தவன் என்பது விசாரணையில் தெரியவந்தது.
ஊரடங்கில் வீட்டிலுள்ள சிறுமிகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்தபடியே உள்ளன.. வயசான கிழவிகளையே விட்டுவைக்காத காமுகர்கள் குழந்தைகளை எப்படி விட்டு வைப்பார்கள்? பெற்றோர்கள்தான் தங்கள் வீட்டு பெண் குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்!
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications