"அப்ப மட்டும் சாதி தெரியலையா".. காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்திக் கொன்ற இளைஞர்!
கோவை: காதலியை வீடு புகுந்து காதலன் கத்தியால் குத்தி கொன்றுள்ளார்.. சாதியை காரணம் காட்டி திருமணத்தை மறுத்ததாலேயே இந்த கொலை நடந்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.
கோவை மாவட்டம் பேரூர் அடுத்துள்ளது ஆறுமுக கவுண்டனூர்.. இங்கு வசித்து வருபவர் சந்திரன்.. இவரது மகன் ரித்திஷ் என்பவர் அதே ஊரை சேர்ந்த ஐஸ்வர்யா என்பவரை காதலித்து வந்துள்ளார்.. அவருக்கு வயது 17 ஆகிறது. ஒரு காலேஜில் படித்து வருகிறார்.

இப்போது லாக்டவுன் போட்டுவிடவும், காதலியை பார்க்க முடியாமல் தவித்து கிடந்தார் ரித்திஷ்.. இதனிடையே இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் அப்பா சக்திவேலுக்கு தெரிந்துவிட்டது.
இருவரும் வேறு வேறு சாதி என்பதால் காதலுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்.. படிக்கிற வயசில இதெல்லாம் தேவையா என்று மகளை கண்டித்தார். அப்பாவின் பேச்சை கேட்டு, மகளும் அதற்கு செவிசாய்த்து காதலனை மறந்தார்.. பேசுவதையும் திடீரென நிறுத்தி கொண்டார்.
ஆனால், ரித்தீஷுக்கு இதை ஏற்க முடியவில்லை.. எப்படியாவது தன்னை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று 17 வயது ஐஸ்வர்யாவை கட்டாயப்படுத்தியுள்ளார்.. வீட்டை விட்டு வெளியே வந்துவிடுமாறும் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் ஐஸ்வர்யா மறுத்துவிட்ட நிலையில், ரித்தீஷ் நேரடியாக காதலி வீட்டுக்கே சென்றுவிட்டார்.. சாதி விவகாரத்தை காரணம் காட்டி காதலை விட்டுவிட வேண்டாம் என்று ரித்தீஷ் மன்றாடியதாக தெரிகிறது.
"காதலிக்கும்போது சாதி தெரியலையா.. உன்னை நான் மனசார விரும்புகிறேன்" என்று சொல்லி தன் காதலை ஏற்றுக் கொள்ளும்படி கெஞ்சியதாக தெரிகிறது. எனினும் ஐஸ்வர்யா தொடர்ந்து வாக்குவாதம் செய்யவும், கத்தியால் குத்தி விட்டார்.. அப்போது குறுக்கே வந்த சக்திவேலையும் குத்திவிட்டு ஓடிவிட்டார் ரித்தீஷ்..
தந்தையையும், மகளையும் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.. தீவிர சிகிச்சை அளித்தும் ஐஸ்வர்யா இறந்துவிட்டார்.. சக்திவேலுக்கு தொடர் சிகிச்சை நடந்து வருகிறது. ஒரு தலை காதலினால்தான் கொலை நடந்ததாக சொல்லப்பட்ட நிலையில், சாதிய பிரச்சனையில்தான் இந்த கொடூர கொலை நடந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. ரித்தீஷை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.. அவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications