காரமடை எல்லை கருப்பசாமி கோயிலில் சித்தர்கள் தூணுக்கு சிறப்பு பூஜை: ஆளுநர் ஆர்என் ரவி தரிசனம்
கோவை: கோவை மாவட்டம், காரமடை அருகே உள்ள பிளிச்சி கிராமம் ஒன்னிபாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு எல்லை கருப்பராயன் கோவிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சுவாமி தரிசனம் செய்தார். 18 அடி உயரமுள்ள சித்தர்கள் தூணுக்கு நடைபெறற சிறப்பு அபிஷேக பூஜையில் ஆளுநர் கலந்துகொண்டார்.
கோவை மாவட்டம், காரமடை அருகே உள்ள ஒன்னிபாளையம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற எல்லை கருப்பராயன் கோவிலில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நடைபெறும் சிறப்பு பூஜைகளில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்வது வழக்கம்.

அந்த வகையில், இன்று நடைபெற்ற சிறப்பு பூஜையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு வழிபாடு செய்தார். இக்கோயிலில் 120 நாட்களுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. கோவிலின் கும்பாபிஷேகத்தன்று பிரதிஷ்டை செய்யப்பட உள்ள 18 அடி உயரமுள்ள சித்தர்கள் தூணுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் ஆளுநர் ஆர்என் ரவி கலந்துகொண்டு வழிபாடு செய்தார்.
ஆளுநர் வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையம் முதல் சத்தி சாலை, கோவில்பாளையம், குப்பேபாளையம் ஆகிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த சிறப்பு பூஜையில் கோவையை சேர்ந்த நடிகை மீனா, நடன இயக்குனர் கலா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications