தோழியின் கணவருடன்.. வசமாக சிக்கிய பழக்கடை பெண்.. வந்ததே ஆத்திரம்.. கடைசியில் ஒரு கொலை.. கோவையில்..!
மனைவியின் தோழியை கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்
கோவை: மனைவியும் தன்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டதால், கள்ளக்காதலியும் தன்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டதால், உச்சக்கட்ட ஆத்திரத்துக்கு சென்றுள்ளார் இளைஞர்.. இதனால் கள்ளக்காதலியின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்.
கோவை சாய்பாபா காலனி சபாபதி வீதியை சேர்ந்தவர் அஸ்வதி.. 20 வயதாகிறது.. பிகாம் பட்டதாரி... கல்யாணம் ஆகவில்லை. இவர் அப்பா இறந்துவிட்டார்.. அம்மாவுடன் தனியாக வசித்து வந்தார். தடாகம் ரோட்டில் உள்ள ஒரு பழக்கடையில் வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தார்..
அப்போது திருமணமான ஒரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது.. இந்த நட்பு வீடு வரை தொடர்ந்தது.. அந்த தோழியின் வீட்டுக்கு அடிக்கடி அஸ்வதி சென்று வந்தார்.

கள்ளக்காதல்
அப்போது தோழியின் கணவர் ஜெகனுடன் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறிவிட்டது.. ஜெகனுக்கு 29 வயதாகிறது. ஒருகட்டத்தில் இந்த கள்ளக்காதல் விவகாரம் தோழிக்கு தெரிந்துவிடவும், தம்பதிக்குள் தகராறு வெடித்தது.. இதனால், கோபித்து கொண்டு, கணவனை விட்டு பிரிந்து சென்றுவிட்டார் மனைவி... எனினும், கள்ளக்காதல் ஜோடிக்கு இது மேலும் குஷியை தந்ததுடன், இருவருக்கும் நெருக்கத்தை அதிகப்படுத்தியது.. அடிக்கடி தனிமையில் சந்தித்து கொண்டனர்.

தடயங்கள்
இந்தநிலையில், 2 நாளைக்கு முன்பு, திடீரென அஸ்வதி பிணமாக வீட்டில் விழுந்து கிடந்தார்.. தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து, விசாரணையை மேற்கொண்டனர். அப்போதுதான் அஸ்வதி கழுத்தில் துணியால் இறுக்கப்பட்ட தடயங்கள் இருந்ததை கண்டறிந்தனர்.. இதையடுத்து அஸ்வதி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் யூகித்தனர்... அஸ்வதியின் உடலும் போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைக்கப்பட்டது.

செல்போன்
அஸ்வதியுடன் தொடர்பில் இருந்த நபர் யார்? என்பது பற்றி விசாரணையில், தோழியின் கணவர் ஜெகனின் பெயர் அடிபட்டது.. அவரை செல்போன் மூலம் போலீசார் தொடர்பு கொள்ள முயன்றனர்... ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது, செல்போன் டவர் ஊட்டியில் இருப்பது தெரியவந்தது. இறுதியில் அவரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.

அதிர்ச்சி
நடந்த சம்பவம் குறித்து போலீசில் ஜெகன் வாக்குமூலமாக தந்துள்ளார். சம்பவத்தன்று அஸ்வதி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த, ஜெகன் அங்கு சென்றுள்ளார்.. அப்போது அஸ்வதி தன்னுடன் பேசுவதையும், பழகுவதையும் நிறுத்திக்கொள்ளுமாறு ஜெகனுடன் கூறியதாக தெரிகிறது... ஏற்கனவே தன்னைவிட்டு பிரியபோவதாக மனைவி சொல்லி கொண்டிருக்கும் நிலையில், கள்ளக்காதலியும் வரவேண்டாம் என்று சொன்னது, ஜெகனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வாக்குமூலம்
இதனால் கள்ளக்காதல் ஜோடி இடையே தகராறு வெடித்துள்ளது. இதில், அஸ்வதி கத்தி கூச்சல் போட முயலவும், உடனே சுடிதார் துப்பட்டாவை எடுத்து அஸ்வதியின் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு நைசாக அந்த வீட்டில் இருந்து ஜெகன் தப்பி ஓடிவிட்டாராம். அஸ்வதியை கொலை செய்ததை ஜெகன் வாக்குமூலமாக அளித்துள்ளதால், அவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.. கோவையில் கள்ளக்காதலி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications