பொள்ளாச்சி தொகுதி யாருக்கு? மீண்டும் காய்நகர்த்தும் சிட்டிங் MP! சீட் ரேஸில் புதுமுகங்கள்!
கோவை: பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்.பி. சண்முகசுந்தரம் மீண்டும் போட்டியிட சீட் கேட்கும் நிலையில், டாக்டர் மகேந்திரனும் வாய்ப்பு கிடைத்தால் விட வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறாராம்.
பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குள் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மடத்துக்குளம், உடுமலைபேட்டை, தொண்டாமுத்தூர், வால்பாறை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் வருகின்றன. பல ஆண்டுகளாக ரிசர்வ் தொகுதியாக இருந்த பொள்ளாச்சி, தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு 2009ஆம் ஆண்டு தான் பொதுத்தொகுதியாக மாறியது. தென்னை விவசாயம், தேங்காய் வியாபாரம், இளநீர் வியாபாரம், தேங்காய் நார், பர்னிச்சர், உள்ளிட்ட தொழில்கள் பரவலாக உள்ளன.

பொள்ளாச்சி திமுக நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சண்முகசுந்தரத்திடம் அரசியல்வாதிக்குரிய எந்த அடையாளத்தையும் பார்க்க முடியாது. தொழிலதிபர் தோரணையிலேயே அரசியல் செய்பவர். தயாநிதி மாறன் ஸ்டைலில் பெரும்பாலும் கலர் ஷர்ட் கலர் பேண்ட் தான் அணிவார்.
பொள்ளாச்சி மக்களவை தொகுதியை பொறுத்தவரை அதிமுக ஆதிக்கம் அதிகம் உள்ள தொகுதியாகும். ஆனால் அப்படியிருந்தும் கடந்த முறை திமுக அங்கு வெற்றிபெற்றது. வரும் தேர்தலிலும் திமுக வெற்றிபெறும் என்றே கருத்துக்கணிப்புகளும் கூறுகின்றன. இதனால் சீட்டுக்கு பலருக்கு முட்டி மோதி வருகின்றனர்.
அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும் பொள்ளாச்சி எம்.பி.சண்முகசுந்தரமும் கோவையில் ஒரே கல்லூரியில் படித்தவர்கள் என்பது கூடுதல் தகவலாகும். இதனால் நேரு மூலம் சீட் வாங்கிவிடலாம் எனக் கருதுகிறது சண்முகசுந்தரம் எம்.பி.தரப்பு. இதனிடையே மக்கள் நீதி மய்யத்திலிருந்து திமுகவில் இணைந்த டாக்டர் மகேந்திரனும் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது. தலைமை பார்த்து வாய்ப்பு கொடுத்தால் தட்டாமல் களம் காண மகேந்திரன் உறுதியாக உள்ளார். இவர்களை தவிர இன்னும் நான்கைந்து புதுமுகங்களும் சீட் ரேஸில் இருக்கிறார்கள்.
இதற்கு மத்தியில் பொள்ளாச்சி மற்றும் ஈரோடு ஆகிய 2 தொகுதிகளில் ஒன்றை ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி கேட்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் பொள்ளாச்சி தொகுதி யாருக்கு என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. திமுக நின்றாலும் சரி, கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கினாலும் சரி இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்ற முடிவோடு இருக்கிறது அதிமுக தரப்பு.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications