"லாக் பண்ணுங்க".. ஜெ. பாணியில் பிளான் போட்ட வேலுமணி.. போலீஸ் தந்த ட்விஸ்ட்.. இது லிஸ்ட்லயே இல்லையே!
கோயம்புத்தூர்: அதிமுக மாஜி அமைச்சர் வேலுமணி வீட்டில் ரெய்டு நடந்து வரும் நிலையில், அவரின் வீட்டிற்கு வெளியே நடந்த சம்பவம் ஒன்று கவனம் ஈர்த்து உள்ளது. இன்று அவரின் வீட்டிற்கு வெளியே 3 சுவாரசியமான சம்பவங்கள் நடைபெற்றன.
அதிமுக மாஜி அமைச்சர் எஸ்.பி வேலுமணி லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டில் சிக்கி உள்ளார். 5 மாவட்டங்களில் தெரு விளக்குகளை எல்.இ.டி பல்புகள் ஆக மாற்றியதில் 500 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக இவர் மீது புகார் உள்ளது.
சபாநாயகராகும் முன் அப்பாவு 2019, 2020ஆம் ஆண்டுகளில் வேலுமணிக்கு எதிராக புகார் கொடுத்தார். எல்இடி விளக்குகள் வாங்குவதில் அவர் ஊழல் செய்துவிட்டார் என்று புகார் கொடுத்தார்.
இந்த புகார் அடிப்படையில் ரெய்டு நடந்து வருகிறது.

ரெய்டு
சந்தை விலையை விட அதிக விலைக்கு வேலுமணி எல்இடி பல்புகளை வாங்கியதாக அப்பாவு மூலம் புகார் வைக்கப்பட்டு, அது தொடர்பாக ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. அரசுக்கு இதில் 74 கோடி ரூபாய் நஷ்டம் என்றும் தெரிய வந்துள்ளது. அவருக்கு சொந்தமான 45 இடங்களில் ரெய்டு நடந்து வருகிறது. இந்த வழக்கில்தான் தற்போது வேலுமணி சிக்கி உள்ளார். இன்று அவரின் வீட்டில் நடந்த ரெய்டின் போது சில சுவாரசிய சம்பவங்கள் நடைபெற்றன.

கூல் ட்ரிங்ஸ், உணவு
பொதுவாக வேலுமணி வீட்டில் கடந்த இரண்டு முறை ரெய்டு நடந்த போதும் அங்கே உணவு வழங்கப்பட்டது. அதேபோல் கூல் டிரிங்ஸ் கொடுக்கப்பட்டது. திருவிழா போல இந்த சம்பவங்கள் நடைபெற்றன. ஆனால் இந்த முறை அப்படி எதுவும் நடக்கவில்லை. காரணம் போலீசார் சாலையின் இரண்டு பக்கத்திலும் 3 கிமீ தூரத்திற்கு மொத்தமாக லாக் செய்தனர். உள்ளே நிர்வாகிகள் யாராவது பார்சலோடு சென்றாலே அவர்களை பிடித்து சோதனை செய்தனர். உள்ளே சென்ற உணவு பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பேரிகேட்
பொதுவாக ரெய்டு நடக்கும் தலைவர்களின் வீட்டை சுற்றி 100 மீட்டர் தூரத்திற்கு பேரிகேட் போடுவது வழக்கம். ஆனால் இன்று சுமார் 1 கிமீ தூரத்திற்கு இரண்டு பக்கமும் பேரிகேட் போடப்பட்டு இருந்தது. இதனால் வெளி ஆட்கள் உள்ளே நுழைய முடியவில்லை. அந்த பகுதியில் வீடு உள்ளவர்களை மட்டுமே போலீசார் அனுமதித்தனர். அந்த சாலையில் ஒரு பள்ளிக்கூடம் இருப்பதால் மாணவர்கள் இது வழியாக செல்வது கஷ்டமானது.

லாக் போட்டனர்
அந்த அளவிற்கு இந்த சாலையை மொத்தமாக போலீசார் லாக் செய்தனர். இந்த நிலையில்தான் மாணவர்கள் வந்ததும்.. நீங்கள் மட்டும் போங்க என்று போலீசார் அவர்களுக்கு கேட்டை திறந்துவிட்டனர். சில அதிமுகவினர், எங்க வீடு இங்கதான் இருக்கு என்று கூறி உள்ளே பொய் சொல்லிவிட்டு செல்ல முயன்றனர். ஆனால் அவர்களையும் போலீசார் அப்படியே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினார்கள். இதில் சிலரை போலீசார் அங்கேயே கண்டித்து அனுப்பினார்கள். இதை மீறி உள்ளே சென்றவர்களைத்தான் போலீசார் கைது செய்தனர்.

லாக்
பொதுவாக அதிமுகவில் ஒரு பிரச்சனை என்றால் ஜெயலலிதா இருந்த காலத்தில் எல்லாம் பெண்கள்தான் களத்தில் இறங்கி போராடுவார்கள். அதிமுகவில் உள்ள மகளிரணி நிர்வாகிகளை ஜெயலலிதா உடனடியாக களமிறக்குவார். சுப்பிரமணிய சாமிக்கு எதிராக அதிமுக மகளிரணி நிர்வாகிகள் போராடியது தொடங்கி பல திமுக நிர்வாகிகளுக்கு எதிராகவும் மகளிரணி நிர்வாகிகளை ஜெயலலிதா களமிறக்கி உள்ளார். மகளிரணி நிர்வாகிகள் களமிறங்கினால் போலீசார் அவர்களை எளிதாக கைது செய்ய முடியாது.

சென்டிமென்ட்
அப்படியே கைது செய்தாலும் அது சென்டிமென்ட்டாக தவறாக முடியும். வெளியே பெண்கள் மீது போலீஸ் அத்துமீறல் செய்ததாக செய்திகள் பரவும் வாய்ப்புகள் உள்ளன. இப்படி ஜெயலலிதா மகளிரணி நிர்வாகிகளை பல போராட்டங்கள் நடத்தி உள்ளனர். அந்த வகையில்தான் இன்றும் எஸ்.பி வேலுமணி ஜெயலலிதா பாணியில் மகளிரணி நிர்வாகிகளை களமிறக்கி உள்ளார். அவர் வீட்டில் ரெய்டு நடக்கும் நிலையில் மகளிரணி நிர்வாகிகள் அங்கு களமிறக்கப்பட்டு உள்ளனர்.

மகளிரணி
அவரின் வீடு முன் மகளிரணி நிர்வாகிகள் வரிசையாக குவிந்து உள்ளனர். ஆனால் இப்படி மகளிரணி நிர்வாகிகள் வருவார்கள் என்பதை போலீசார் ஏற்கனவே உணர்ந்து கொண்டதாக தெரிகிறது. இப்படி ஏதாவது நடக்க வாய்ப்பு உள்ளதாக போலீசார் ஏற்கனவே யூகித்ததாக தெரிகிறது. இதன் காரணமாகவே இன்று ரெய்டோடு சேர்த்து பெண் போலீசார் வந்து இருந்தனர். பொதுவாக பெண் போலீசாரை ரெய்டு நேரத்தில் பார்க்க முடியாது.

ரெய்டு
ஆனால் இன்று ரெய்டில் பெண் போலீசார் தயாராக களமிறக்கப்பட்டு இருந்தனர். அங்கே அதிமுக பெண் நிர்வாகிகள் வந்ததும் உடனே அவர்களை போராட விடாமல் ஒரு கேட் பக்கம் தள்ளினார்கள். போராட்டம் செய்யவும் விடாமல், கைதும் செய்யாமல் கேட் ஓரமாக தள்ளினார்கள். அதோடு அவர்களை அங்கேயே அமர வைத்து லாக் செய்தனர். இதனால் அவர்களும் போராட்டம் செய்ய முடியாமல் முடங்கினார்கள்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications