கோவை.. இந்து முன்னணி நிர்வாகி வீடுகள் மீது குண்டு வீச்சு! சிக்கிய பிஎஃப்ஐ நிர்வாகிகள்! 3 பேர் கைது
கோவை: கோவை, பொள்ளாச்சியில் இந்து முன்னணி நிர்வாகிகளின் வீடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாடு முழுவதும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் வீடுகள், அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமையும் அமலாக்கத் துறையும் சோதனை நடத்தியது.
சுமார் 11 மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 106 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் மட்டும் 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பிஎஃப்ஐ அமைப்பினர் போராட்டம், சாலை மறியலை நடத்தினர்.

கோவை பாஜக அலுவலகம்
இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி கோவையில் சித்தாபுதூர் என்ற பகுதியில் உள்ள பாஜக அலுவலகம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். அது போல் கோவை காந்திபுரத்தில் இருந்த துணிக் கடை மற்றும் 100 அடி சாலையில் உள்ள ரத்தினபுரி பாஜக மண்டலத் தலைவர் மோகனுக்கு சொந்தமான வெல்டிங் கடை மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

இந்து முன்னணி
அந்த துணிக் கடையும் இந்து முன்னணியினருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. அது போல் பொள்ளாச்சியில் பொள்ளாச்சியை அடுத்த குமரன் நகர் பகுதியில் உள்ள பாஜக நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. பாஜக மாவட்டச் செயலாளர் பொன்ராஜ், சிவா மற்றும் இந்து முன்னணியை சேர்ந்த சரவணன் ஆகியோர் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

ஆட்டோக்கள் சேதம்
இதில் இரு கார், இரு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீஸார் தனிப்படை அமைத்து மர்மநபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் கேன்கள், வாட்டர் பாட்டில்களில் பெட்ரோல்களை விற்பனை செய்யக் கூடாது என தென் மண்டல பகுதிகளுக்கு காவல் துறை சார்பில் சுற்றறிக்கை விடுக்கப்பட்டது.

3 பேர் கைது
கோவை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் இந்து அமைப்பினரின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீஸ் தரப்பில் வெளியான அறிக்கையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி உட்கோட்ட மேற்கு காவல் நிலைய சரகத்தில் கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி குமரன் நகரில் அமைந்துள்ள இந்து அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகளின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த 2 நான்கு சக்கர வாகனம், 2 ஆட்டோக்கள், ஒரு டாட்டா ஏசர் வாகனத்தின் கண்ணாடிகளை சேதப்படுத்தியும் மேற்படி 2 வாகனங்களின் மீது டீசலை ஊற்றியும் உள்ளனர்.

ஆய்வு
இது சம்பந்தமாக பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய எதிரிகளை விரைந்து கைது செய்யும் பொருட்டு மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர் உத்தரவின் பேரில் கோவை சரக காவல் துறை துணைத் தலைவர் முத்துசாமி மேற்பார்வையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் வழிகாட்டுதலின் பேரிலும் பொள்ளாச்சி துணைக் காவல் கண்காணிப்பாளர் தீபா சுஜாதா தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை செய்தும் அந்த பகுதியில் உள்ள சுமார் 250-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தும் 500-க்கும் மேற்பட்ட நபர்களின் செல்போன் எண்களை ஆய்வு செய்தும் சந்தேக நபர்களை தொடர்ந்து கண்காணித்து விசாரணை மேற்கொண்டனர்.

யார் அந்த மூவர்?
இதில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் பொள்ளாச்சியை சேர்ந்த ஜமால் மைஜதீன் என்பவருடைய மகன் முகமது ரபிக் (26) (ஜவுளிக் கடை தொழில்), பொள்ளாச்சியை சேர்ந்த மகாத்மா காந்தி வீதியை சேர்ந்த அக்பர் என்பவரது மகன் ரமீஸ் ராஜா (36), இசாக் என்பவருடைய மகன் மாலிக் (எ) சாதிக் பாஷா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் பிஎஃப்ஐ அமைப்பை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications