கள்ள உறவிற்கு இடைஞ்சல் - கோவையில் 3 வயது குழந்தையை கொன்று முட்புதரில் வீசிய கொடூரம்
கள்ள உறவிற்கு இடைஞ்சலாக இருப்பதாக நினைத்து மூன்று வயது குழந்தையை கொன்று முட்புதரில் வீசியிருக்கிறான் ஒரு பேய். கோவை தனிப்படை போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.
கோவை: கள்ளக்காதல் கொலைகள் தமிழ்நாட்டில் பெருகி வருகின்றன. கணவன் மனைவியை கொல்வது, மனைவி கணவனை கொல்வது என அதிகரித்த நிலையில், பிள்ளைகளையும் கொடூரமாக கொல்லும் செயல் அதிகரித்துள்ளது. கோவையில் பெற்ற தாயே 3 வயது குழந்தையை கொன்று புதரில் வீசிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. வழக்குப் பதிவு சரவணம்பட்டி போலீசார் கொலைக்கு காரணமான நபரை தேடி வருகின்றனர்.
கோவையில் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. கோவை துடியலூரில் 7வயது பெண் குழந்தை கடந்த மார்ச் மாதம் பலாத்காரம் செய்து கொள்ளப்பட்டார். அந்த பரபரப்பும் பதற்றமும் தேர்தலால் அடங்கிப் போன நிலையில் மீண்டும் ஒரு குழந்தை கொலை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்டுள்ளார்.

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள கரட்டுமேடு அருகே முட்புதறில் 3 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த சிறுமியின் உடலில் காயங்கள் இருந்தன. காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அந்த சிறுமியின் பெயர் ஸ்ரீதேவி என்று தெரியவந்தது. காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த பால்ராஜ், ரூபிணி தம்பதியரின் மகள் என்பது தெரியவந்தது.
சிறுமியின் உடலைப் பார்த்து ரூபிணி கதறி அழுதார். சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த சரவணம்பட்டி போலீசார் சிறுமியின் அம்மா முன்னுக்குப் பின் முரணாக பேசவே சந்தேகமடைந்த போலீசார், தங்கள் பாணியில் விசாரணை நடத்தினர். அப்போது பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளி வந்தன.
ரூபிணி தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். ரூபிணியுடன் செல்போனில் பேசிய தமிழ்செல்வன் என்ற நபர், தனது வலையில் வீழ்த்தியுள்ளார்.
அன்பாக பேசி நடிக்கவே, தனது கதையை அவனிடம் கூறியிருக்கிறாள் ரூபிணி. இருவரும் பலமுறை தனிமையில் சந்தித்து பேசியிருக்கின்றனர். ஞாயிறன்று குழந்தை ஸ்ரீதேவியுடன் சரவணம்பட்டி அழைத்து வந்தான் தமிழ் செல்வன். இருவரும் உல்லாசமாக இருக்கவே, குழந்தை அழுதுள்ளது.
பாட்டி வீட்டில் குழந்தை விட்டு விட்டு வருவதாக கூறி சென்ற தமிழ்செல்வன் வரவில்லை. குழந்தையும் காணவில்லை. பேக்கரியில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்த ரூபிணிக்கு குழந்தை சடலமாக திரும்ப கிடைத்தது. குழந்தையை இப்படி கொன்று விட்டானே என்று கூறி கதறி அழுதார். தப்பி ஓடிய தமிழ் செல்வனை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
சமீபத்தில் சென்னையிலும், திருச்சியிலும் கள்ள உறவிற்கு இடைஞ்சலாக இருப்பதாக கூறி பிஞ்சு குழந்தைகளை அடித்துக் கொன்ற கொடூரர்கள் கைது செய்யப்பட்டனர். கோவையில் 3 வயது சிறுமி கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?











Click it and Unblock the Notifications