அயோத்திக்கு சிறப்பு ரயில்.. பக்தர்கள் உற்சாகம்.. அண்ணாமலை பூரிப்பு.. வழியனுப்பிய வானதி சீனிவாசன்
கோவை: தமிழகத்தில் இருந்து, அயோத்தி ஶ்ரீராமர் கோவில் தரிசனத்துக்குச் செல்லவிருக்கும் பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பான, மன நிறைவான தரிசனம் கிடைக்க, வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கோவையில் இருந்து அயோத்தி சென்ற பக்தர்களை வானதி சீனிவாசன் வழியனுப்பி வைத்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த மாதம் ராமர் கோயில் திறக்கப்பட்டது. அயோத்தியில் சரயு நதிக்கரையில் பெரும் பொருட்செலவில் கட்டப்பட்டுள்ள இந்த கோயிலில் ராமர் குழந்தை வடிவில் காட்சி அளிக்கிறார். கடந்த மாதம் 22 ஆம் தேதி பிரதமர் மோடி ராமர் சிலையை பிரான பிரதிஷ்டை செய்து வைத்தார். ராமர் கோயில் திறக்கப்பட்ட அடுத்த நாள் முதலே பக்தர்கள் அயோத்தியில் குவிந்து வருகின்றனர்.

அயோத்தி நகரில் பக்தர்களின் வசதிக்காக தங்கும் இடம், உணவகங்கள் என பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் மத்திய அரசு, அயோத்திக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இருந்து வியாழக்கிழமை முதல் அயோத்திக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தமிழகத்திலிருந்து, அயோத்தி ஶ்ரீ ராமர் கோவில் செல்லும் பக்தர்களுக்காக, மாண்புமிகு பாரதப் பிரதமர்
நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்திலிருந்து 34 சிறப்பு ரயில்களை இயக்குகிறது. இந்த ரயில்கள், கோவை, மதுரை, கன்னியாகுமரி ஆகிய நகரங்களில் இருந்து அயோத்திக்குச் செல்லவிருக்கின்றன.
தமிழகத்தில் இருந்து அயோத்தி ஶ்ரீராமர் கோவிலில் தரிசனம் செய்ய ஒரு லட்சத்திற்கும் அதிகமாக பக்தர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு மானிய விலையில் ரயில் பயணக் கட்டணம், இலவச உணவு, இலவச தங்குமிடம், இலவச உள்ளூர் பயண சேவை மற்றும் சிறப்பு தரிசன வசதிகள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
அயோத்தி செல்வதற்கான முதல் சிறப்பு ரயில், இன்று மாலை, கோவையிலிருந்து புறப்படவிருக்கிறது. தமிழகத்தில் இருந்து, அயோத்தி ஶ்ரீராமர் கோவில் தரிசனத்துக்குச் செல்லவிருக்கும் பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பான, மன நிறைவான தரிசனம் கிடைக்க, வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார் அண்ணாமலை.
அயோத்திக்கு கோவையில் இருந்து முதல் ரயில் பக்தர்களுடன் புறப்பட்டது. கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன், அனைவருக்கும் உணவு குடிநீர் வழங்கி வழியனுப்பி வைத்தார். அதனை தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் இருந்து அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோவில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து இன்று கோவையிலிருந்து அயோத்தி செல்லும் சிறப்பு இரயிலை துவக்கி வைத்தேன். இப்புனித பயனத்திற்கு செல்லும் பக்தர்கள் அனைவருக்கும் ஸ்ரீ ராமரின் தரிசனம் மன நிறைவுடன் அமைய வாழ்த்துகிறேன் என்று வானதி சீனிவாசன் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ராம பக்தர்கள் அயோத்தி ராமர் கோயிலுக்கு வருகை புரிந்து வருகின்றனர். காணிக்கையையும் தாராளமாக வாரி வழங்கி வருகின்றனர். அயோத்தியில் பக்தர்களின் வசதிக்காக சமீபத்தில்தான் உத்தரப்பிரதேச அரசு விமான நிலையம் திறந்தது. தொடர்ந்து, டெல்லி, சென்னை, பெங்களூரு என பல நகரங்களில் இருந்து அயோத்திக்கு விமான சேவை தொடங்கப்பட்டது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications