கோவை சிறைக் கழிவறையில் கழுத்து முறிந்து இறந்த கைதி.. விலகாத மர்மம்.. 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்
கோவை: கோவை மத்திய சிறை வளாகத்தில் தண்டனை கைதியாக இருந்த ஏசுதாஸ் நேற்று முன் தினம் மர்மமான முறையில் கழுத்து முறிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்று விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அன்றைய தினம் பணியில் அலட்சியமாக இருந்த சிறைத்துறை அதிகாரிகள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மத்திய சிறையில் சுமார் 2,500க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் மற்றும் 500 க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் இருக்கிறார்கள். கோவை சிறை வளாகத்தில் தற்போது செம்மொழி பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் கோவை சிறை வளாகம் காரமடை அருகே உள்ள பிளிச்சி கிராமத்துக்கு மாற்றப்படுகிறது.

அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் கரையிருப்பு பகுதியைச் சேர்ந்த தாஸ் என்கிற ஏசுதாஸ் (33) என்பவர் தண்டனை கைதியாக இருந்தார். திருப்பூர் புறநகர் பகுதியில் நடைபெற்ற ஒரு கொலை சம்பவத்துக்காக தண்டனை பெற்று அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் கோவை சிறையில் தண்டனை கைதியாக இருந்தார்.
இவர் நேற்று முன்தினம் (ஜனவரி 27) காலை சிறை வளாகத்தில் உள்ள தொழிற்கூடத்தில் பணியாற்றி கொண்டிருந்தார். அன்றைய தினம் மதியம் அவர் எட்டாவது பிளாக்கில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வெளியில் வரவில்லை. சந்தேகமடைந்த சிறைத்துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது கழிவறையில் இருந்து ஏசுதாஸ் சடலமாக மீட்கப்பட்டார்.
ஏசுதாஸின் கழுத்து எலும்பு முறிந்திருந்ததால் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏசுதாஸ் தற்கொலை செய்து கொண்டார் என்று தான் முதல்கட்ட தகவல் வெளியானது. கழிவறையில் மயங்கி கீழே விழுந்து கழுத்து எலும்பு முறிந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று மருத்துவ அறிக்கை வெளியானது.
அதேநேரத்தில் ஏசுதாஸின் கழுத்தில் தசை சிதைந்ததற்கான காயம் கண்டறியப்பட்டது. இதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்தது. இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள். ஏசுதாஸ் பணியாற்றிய தொழிற்கூடம், சிறைத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கீழே விழுந்தபோது அங்கிருந்த பொருள் ஏதாவது பட்டதால் கழுத்து எலும்பு முறிந்ததா அல்லது சக கைதிகள் தாக்கி கொலை செய்தார்களா உள்ளிட்ட கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கைதிகளின் பாதுகாப்பு குறித்த கேள்விளையும் எழுப்பியுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவத்தின்போது அலட்சியமாக இருந்த சிறைத்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சம்பத்தன்று எட்டாவது பிளாக்கில் பணியில் இருந்த துணை ஜெயிலர் மனோரஞ்சிதம், உதவி சிறை அலுவலர் விஜயராஜ், சிறை தலைமை காவலர் பாபுராஜ், சிறை காவலர் தினேஷ் ஆகிய நான்கு பேரை சஸ்பெண்ட் செய்து கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில் குமார் இன்று உத்தரவிட்டுள்ளார்.
கோவை மத்திய சிறையில் தொடர்ந்து ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கண்காணிப்பாளர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார். மறுபக்கம் ஏசுதாஸ் மர்ம மரணம் தொடர்பான ரேஸ்கோர்ஸ் காவல்துறையினரின் வழக்கு விசாரணையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
காந்திபுரம் பேருந்து நிலையத்தில் குத்தாட்டம்.. கேரளா யூடியூபரை டரியலாக்கிய கோவை போலீஸ் -
கேஸ் தட்டுப்பாடு! கோவையில் அடுப்பே இல்லாமல் 2000 டிஷ்! தேங்காயில் தயிர்! படையல் சிவா அசத்தல் -
கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை வீடாக மாற்றிக்கொண்ட திமுக பிரமுகர்.. அண்ணாமலை வீடியோ -
வெள்ளியங்கிரி மலையில் மீண்டும் சோகம்.. முதல் மலையிலேயே மூச்சுத்திணறி பக்தர் உயிரிழப்பு! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா?












Click it and Unblock the Notifications