சயனைடு கலந்த தண்ணீர்.. கோவை தொழில் அதிபர் குடும்பமே உயிருடன் இல்லை.. உருக்கமான தகவல்
கோவை: கோவை செல்வபுரம் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடன் தொல்லை காரணமாக இந்த முடிவினை தொழில் அதிபர் குடும்பம் எடுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கோவை தெலுங்குபாளையம் மணி ரைஸ் மில் காலனியை சேர்ந்த 46 வயது ராமச்சந்திரன் மதுபாட்டில்களுக்கான மூடிகளை தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வந்துள்ளார் இவருக்கு சொந்தமாக அரிசி ஆலையும் இருக்கிறது. ராமச்சந்திரன் மனைவி பெயர் விசித்திரா (42). இவர்களுக்கு 22 வயதில் ஸ்ரீநிதி என்ற மகளும், 14 வயதில் ஜெயநிதி என்ற மகளும் இருந்தனர்.

மகள் ஸ்ரீநிதி கனடாவில் படித்து வந்த நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தான் படித்து முடித்துவிட்டு கோவை வந்துள்ளார். ஜெயநிதி தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். இந்நிலையில் நேற்று காலை 9.30 மணிக்கு, இவர்களது வீட்டில் வேலை செய்யும் சுமதி என்கிற பெண் வீட்டுக்கு வந்திருக்கிறார்.
அப்போது வீட்டில் இருந்த ராமச்சந்திரன், வேலைக்காரியை இன்றைக்கு வேண்டாம் வீட்டுக்கு செல்லுமாறு கூறினார். இதனால் சுமதி தனது வீட்டுக்கு சென்று விட்டார். இந்தநிலையில் இவர்களது வீடு நீண்டநேரமாக பூட்டிக்கிடந்ததால் அருகில் வசித்து வந்த ராமச்சந்திரனின் அக்காள் ராணி, மதியம் 12 மணியளவில் தம்பியின் வீட்டுக்கு சென்று, கதவை திறந்து உள்ளே போயிருக்கிறார்.
அப்போது ராமச்சந்திரன், மகள்கள் ஸ்ரீநிதி, ஜெயநிதி ஆகியோர் கட்டிலிலும், மனைவி விசித்திரா தரையிலும், வாயில் நுரை தள்ளியபடி பிணமாக கிடந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராணி அலறியடித்து கொண்டு ஓடி வந்துள்ளார். இதுபற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனே உதவி கமிஷனர் ரகுபதி ராஜா தலைமையில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 4 பேரும் வெள்ளைநிற சயனைடில் தண்ணீர் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டதை கண்டனர். தொடர்ந்து நடத்திய சோதனையில், தற்கொலைக்கு முன்பு ராமச்சந்திரனின் மனைவி எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அதில் கணவரின் கடனால் தற்கொலை செய்கிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்

போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்படி, தொழில் அதிபரான ராமச்சந்திரன், தான் வசிக்கும் பகுயிலேயே புதிய பங்களா வீடு கட்டி வந்துள்ளார். அதேநேரம் தொழிலை மேம்படுத்த பலரிடம் கடன் வாங்கி உள்ளார். சொத்துகளை அடமானம் வைத்தும் ரூ.20 கோடிக்கு கடன் பெற்றுள்ளாராம். இதில் சில கடன்களை அடைத்துவிட்ட போதிலும் கடன் அதிகமாக இருந்துள்ளது.
இந்தநிலையில் மீண்டும் கடன் வாங்க மனைவி விசித்திராவை அவர் வற்புறுத்தினாராம். ஆனால் அதற்கு மனைவி மறுத்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் விரக்தி அடைந்த விசித்திரா சயனைடு விஷத்தை தண்ணீரில் கலந்து குடித்து குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மனைவி மற்றும் குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டு இருப்பதை பார்த்த ராமச்சந்திரன், விரக்தியில் மீதமிருந்த சயனைடை தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலை செய்திருக்கிறார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications