கோவையில் தோட்டங்களில் மர்மமான முறையில் கொத்து கொத்தாக காக்கைகள் பலி.. ஒருவர் கைது! விசாரணையில் பகீர்
கோவையில் 25 காக்கைகள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவத்தில் 48 வயது நபர் கைது செய்யப்பட்டார்.
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே 25 காக்கைகளுக்கு விஷம் கொடுத்து கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பெரியகவுண்டனூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் உள்ள தோட்டங்களில் கடந்த சில நாட்களாக காக்கைகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.
இது எப்படி இறக்கின்றன என்பது குறித்து தெரியாமல் விவசாயிகள் குழப்பத்தில் இருந்தனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் காலை நாகராஜ் என்பவரது விவசாய தோட்டத்தில் ஒரு நபர் எதையோ சேகரித்து சாக்கு பையில் எடுத்து போட்டுக் கொண்டிருந்தார். அந்த நபர் தேங்காய்களை திருடுவதாக நினைத்த நாகராஜ், அருகே சென்று பையை பார்த்தார்.

கோணிப்பை
அப்போது அந்த கோணிப்பையில் இறந்த காகங்கள் இருந்தன. இதை கண்ட நாகராஜ் அதிர்ச்சி அடைந்து அவரிடம் விசாரித்தார். ஆனால் அந்த நபரோ பதில் ஏதும் கூறாமல் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அப்போது அங்கிருந்த சில விவசாயிகளும் பொதுமக்களும் அந்த நபரை துரத்திச் சென்றனர். பின்னர் ஒரு இடத்தில் அவரை மடக்கி பிடித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸார் வந்தனர்.

சூர்யா
அந்த நபரிடம் விசாரணை நடத்திய போது அவர் சிஞ்சுவாடி கிராமத்தை சேர்ந்த சர்க்கஸ் தொழிலாளி சூர்யா (48) என்பது தெரியவந்தது. வெண்படை நோயை குணப்படுத்த மருந்து தயாரிக்க காகங்களை கொன்றது தெரியவந்தது. இதையடுத்து சூர்யா மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மருந்துக்காக கொன்றாரா
மருந்துக்காக கொன்றாரா இல்லை வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பதை விசாரித்து வருகிறார்கள். மேலும் அவரிடம் இருந்து இறந்த காகங்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சூர்யா போலீஸாரிடம் கூறுகையில் நான் ஒரு தினக் கூலி தொழிலாளி. எனது மூதாதையர்கள் பாரம்பரிய முறையில் மருந்துகளை தயாரித்து வந்தனர். அது போல் நானும் காகங்களில் இருந்து மருந்து தயாரித்து அதை விற்கலாம் என நினைத்தேன் என்றார்.

சூர்யா கைது
இதையடுத்து நாகராஜின் புகாரின் பேரில் சூர்யாவை கைது செய்த போலீஸார் அவரை பொள்ளாச்சி குற்றவியல் நீதித் துறை நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். இதையடுத்து நீதிபதி உத்தரவின் பேரில் கோவை மத்திய சிறையில் சூர்யா அடைக்கப்பட்டார். இறந்த காகங்களை போலீஸார் கால்நடை மருத்துவரிடம் ஒப்படைத்தனர். அந்த காகங்களிடம் இருந்து மாதிரிகளை எடுத்து தடயவியல் துறை பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த காக்கைகளுக்கு மூக்குப்பொடியுடன் ஏதோ ஒரு விஷத்தையும் அந்த நபர் கலந்துள்ளது தெரியவந்தது.

விவசாயிகள் கருத்து
இந்த சம்பவம் குறித்து விவசாயிகள் கூறுகையில் இது போல் இந்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட காகங்கள் இறந்துள்ளன. விவசாய தோட்டங்களில் பயிர்களை உண்ண வரும் காக்கைகளுக்கு விஷம் கொடுத்து கொல்கிறார்கள். அந்த விஷத்தை எங்களது கால்நடைகள் உண்டால் உயிரிழக்க நேரும். எனவே பிடிபட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். ஆனால் மருந்துக்காக காக்கைகள் கொல்லப்பட்டது சந்தேகமளிப்பதாகவும் அவை பிரியாணி செய்ய கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் சிலர் தெரிவிக்கிறார்கள். ஏற்கெனவே நிறைய வீட்டு விலங்குகளும், காட்டு விலங்குகளும் கொல்லப்படும் சூழலில் காக்கைகளும் கொல்லப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னோர்களாக பாவிக்கும் காக்கைகளுக்கு உணவளித்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் காணாமல் போகும் என்பது ஐதீகம்.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்












Click it and Unblock the Notifications