கோவை மாநகராட்சியில் 54 இளநிலை உதவியாளர்கள் நீக்கம்.. கமிஷனர் அதிரடி.. வேலுமணி அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

கோவை: அதிமுக ஆட்சியில் வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தார். கோவை மநாகராட்சி அவரின் கண் அசைவில் தான் இயங்கியது. கோவை மாநகராட்சியில் 54 இளநிலை உதவியாளர்கள் சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் அவர்களின் பணி ஆணையை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் அவர்களுக்கு பணியாணை ரத்து செய்யப்பட்டு, பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

கோவை மாநகராட்சியில் 2021ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் 69 இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வு நடைபெற்றது. இதற்கு 654 பேர் விண்ணப்பித்தனர். 440 பேர் நேர்முக தேர்வு மற்றும் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். இதில் 54 பேர் நேரடி நியமன முறையில் இளநிலை உதவியாளர்களாக நியமிக்கப்பட்டனர். அப்போது வேலுமணி உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்ததார். கோவை அவருடைய சொந்த மாவட்டம். அதனால் தனக்கு நெருக்கமான கட்சிக்காரர்களை அந்த பணியில் நியமனம் செய்ததாக புகார் எழுந்தது.

Coimbatore Corporation Junior Assistants

54 இளநிலை உதவியாளர்கள் நியமனம்

சீனியாரிட்டி விதிகளை மீறி ஒரே நாளில் நேர்காணல் முடித்து, இரவோடு இரவாக அந்த 54 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. இதுகுறித்து நாளிதழ்களில் விளம்பரம் செய்யாமல், இடஒதுக்கீட்டையும் பின்பற்றவில்லை என்று புகார் எழுந்தது. இதுதொடர்பாக கோவை மாநகராட்சியில் பதவி உயர்வுக்காக காத்திருந்த தூய்மை பணியாளர்கள் 11 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம் சுப்ரமணியம், செந்தில்குமார் அமர்வில் கடந்த ஜூன் 18ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்வாணையம் மற்றும் தேர்வு நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. புறவாசல் வழியாக வந்தவர்கள் புறவாசல் வழியாக தான் செல்ல வேண்டும். இவர்களின் பணி ஆணை ரத்து செய்ய வேண்டும். இதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதியான நபர்கள் மூலமாக காலி பணியிடம் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.


நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இளநிலை உதவியாளர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த வழக்கு நீதிபதிகள் விஸ்வநாதன், அருண் பாலி அமர்வில் கடந்த ஜூலை 14ம் தேதி விசாரணைக்கு வந்தது. ஒரே நாளில் எப்படி நேர்காணல் நடத்தி, பணி ஆணை வழங்க முடியும். இப்படி அப்பட்டமான விதிமீறல். 54 பேரின் பணி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்ற தீர்ப்பையே மீண்டும் உறுதி செய்தனர்.

இதனால் வேலுமணி மற்றும் அவர் மூலம் நியமனம் செய்யப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டது. இதுகுறித்து "தமிழ்நாடு அரசிடம் ஆலோசனை கேட்டும், சட்ட வல்லுநர்களிடம் பேசியும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கோவை மாநகராட்சி நிர்வாகம் கூறியது. இந்நிலையில் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி 54 இளநிலை உதவியாளர்களை பணி நீக்கம் செய்ய, மாநகராட்சி கமிஷனர் கட்டா ரவி தேஜாவுக்கு, நகராட்சி நிர்வாகத்துறை செயலர் ககன்தீப் சிங் உத்தரவு பிறப்பித்தார்.

பணியில் இருந்து நீக்கம்

அதடினப்படையில் மாநகராட்சியில் பணியாற்றி வந்த 54 இளநிலை உதவியாளர்களை மாநகராட்சி கமிஷனர் கட்டா ரவி தேஜா நேற்று பணி நீக்கம் செய்துள்ளார். 54 பேரும் நேற்றுடன் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். மாநகராட்சி பிரதான அலுவலகம், மண்டல அலுவலகங்களில் பணியாற்றியவர்களுக்கு அந்தந்த அலுவலகங்களில் பணி ரத்துக்கான ஆணை வழங்கப்பட்டது. ஆனால் ஒரு சிலர் மட்டுமே ஆணையை பெற்று கொண்டனர்.

பெரும்பாலானோர் ஆணையை வாங்காமல் வீட்டுக்கு சென்றனர். "நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தான் பணி ஆணை ரத்து செய்யப்பட்டது. இதை வாங்க மறுப்பது நீதிமன்றத்தை அவமதிப்பதாகும். அவர்கள் வீட்டிற்கு நேரடியாக சென்றோ அல்லது தபால் மூலமாகவோ ரத்து ஆணை வழங்கப்படும்" என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறினர். இதனால் கோவை மாநகராட்சியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து வழக்கு தொடர்ந்த ஈஸ்வரியின் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் கூறுகையில், "நீக்கம் செய்யப்பட்ட 54 இளநிலை உதவியாளர் பணியிடங்களில் விதிகளை பின்பற்றி தகுதியானவர்களை நியமிக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் வரை சென்று நீதி பெற்ற ஈஸ்வரி உள்ளிட்ட மாநகராட்சி ஊழியர்கள் 11 பேருக்கு கருணை அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+