கோவை அருகே மகளை "வேட்டையாடிய" மிருகம்.. போக்சோ சட்டத்தில் ஏற்கெனவே கைதாகியும் புத்தி வராத அவலம்
Recommended Video

கோவை : கோவை அருகே 7-ஆம் வகுப்பு படிக்கும் மகளை கர்ப்பமாக்கிய தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம், பூலுவம்பட்டி அருகே உள்ள வெள்ளிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (35). இவர் லோடுமேன் ஆவார். இவரது மனைவி தனியார் பள்ளியில் ஆயா வேலை பார்த்து வருகிறார்.
இருவரும் 13 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இவர்களது மகள், தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்குள்பட்ட அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

கட்டாயப்படுத்தி
சில மாதங்களுக்கு முன்பு , மனைவி வேலைக்கு சென்று விட , மகளுக்கு பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தவரை அவரது தந்தை கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டுள்ளார். அவரது மனைவிக்கு தெரியாமல் இது தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது.

தந்தைதான் காரணம்
வயிற்று வலி என கூறிய மகளை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அப்போது ஸ்கேன் எடுத்து பார்த்ததில் மகள் கர்ப்பமாக இருப்பதாக அறியப்பட்டது.

ராமலிங்கம் கைது
இதுகுறித்து சிறுமியிடம் கேட்டதில் தந்தைதான் இதற்கு காரணம் என தெரியவந்தது. இதனையடுத்து மருத்துவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் , பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ராமலிங்கத்தை கைது செய்துள்ளனர்.

போக்சோ சட்டம்
ஏற்கெனவே செல்வபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தந்தை மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் இணைந்து சிறுமியை பலாத்காரம் செய்த சம்பவத்தில் இருவரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications