கோவை அருகே ஆம்னி பேருந்தில் டிரைவரின் அசிங்கமான வேலை.. அரண்டு போன மக்கள்.. மறக்க முடியாத பரிசு

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து பெங்களூர் நோக்கி 50 பயணிகளுடன் சென்ற ஆம்னி பேருந்து ஒன்று பல்லடம் அருகே தடுமாறியபடி சென்றது. இதனால் தாங்கள் வந்த பேருந்துக்கு என்ன ஆனது என்று பயணிகள் சென்று பார்த்த போது, பேருந்தை ஓட்டி வந்த டிரைவர் மது போதையில இருந்ததை கண்டு அதிர்ந்தனர். உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்த பின்னர் என்ன ஆனது என்பதை பார்ப்போம்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இருந்து- கர்நாடக மாநிலம், பெங்களூர் செல்லும் ஆம்னி பேருந்து ஒன்று நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. 50 பயணிகளுடன் சென்ற பேருந்து, திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வடுகபாளையம் பகுதிக்கு வந்த போது, பஸ் தாறுமாறாக ஓடியது. உறங்கி கொண்டிருந்த பயணிகள் விழித்து எழுந்ததுடன், ஏன் இப்படி ஆனது என யோசித்தனர்.

omni bus driver

உடனடியாக அவர்கள் சந்தேகத்துடன் டிரைவரை நோக்கி சென்று விசாரிக்க போனார்கள். அங்கு ஓட்டுநர் போதையில் நிலைதடுமாறியபடி பேருந்தை ஓட்டியது தெரியவந்தது. இதனிடையே பேருந்து தள்ளாடியபடி சென்றதை கண்ட வாகன ஓட்டிகளும் ஆம்னி பேருந்தை மடக்கினார்கள். ஒரு வழியாக பேருந்தை நிறுத்திய பயணிகள், டிரைவரை சிறைபிடித்ததுடன், அவரை சோதித்தனர். அவர் ஜூஸ் பாட்டிலில் மதுபானத்தை கலந்து இருந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே போலீசார் வருவதற்குள் மது போதையில் இருந்த டிரைவரை பயணிகள் சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் அப்படியே அந்த டிரைவர் வெங்கடாசலபதியை தரையில் உட்கார வைத்தனர். இதனிடையே பேருந்து ஓனரிடம் கேட்ட போது, பேருந்தில் ஏறிய போது, டிரைவர் குடிக்கவில்லை என்றும் நன்றாகவே இருந்தார் என்றும் சொன்னாராம்.

அதன்பிறகே அவர் மது அருந்தியதாக புகார் எழுந்தது . இதனிடையே பல்லடம் டி.எஸ்.பி., விஜிகுமார் மற்றும் பல்லடம் நகர போலீசார் விசாரணை நடத்தினர். டி.எஸ்.பி., விஜிகுமார் உத்தரவின் பேரில் டிரைவர் வெங்கடாஜலபதி ( 32 வயது) என்பவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். அவர் மது அருந்தியது உறுதி செய்யப்பட்டது. பயணியர், மாற்று பஸ் மூலம் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டார்கள். 'டிரைவரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என டி.எஸ்.பி., விஜயகுமார் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+