வால்பாறையில் ஜெர்மனி சுற்றுலா பயணி.. யானையை பார்த்ததும் யூடர்ன் போட்டிருக்கலாமே.. நீங்களே பாருங்க
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி, யானை சாலையில் நிற்பதை பார்த்த உடன் யூடர்ன் போட்டிருந்தால் உயிர் தப்பியிருப்பார். முதலில் ஒரு கார் சென்றுவிட்டது. பின்னாடியே ஜெர்மனி நாட்டு சுற்றுலா பயணி காட்டு யானை நிற்பதை கண்டு கொள்ளாமல் வேகமாக சென்றார். இதைகண்டு கோபம் அடைந்த யானை அவரை என்ன செய்தது என்று வீடியோவில் நீங்களே பாருங்கள்.
கோவை மாவட்டம் வால்பாறை ஆண்டு முழுவதும் குளுகுளுவென கால நிலை நிலவும் கோடைவாசல் தலமாகும். கோவை மாவட்டத்தின் மிக முக்கியமான கோடைவாசல் தலமாக திகழ்கிறது. வால்பாறையில் ஏராளமான விடுதிகள் உள்ளன. சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன. கால நிலையும் மிக அருமையாக இருக்கும். எனவே வால்பாறையை சுற்றிப்பார்க்க தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்வது வாடிக்கையாக உள்ளது.

வால்பாறையை பொறுத்தவரை வனவிலங்கு நடமாட்டம் மிக அதிகமாக இருக்கும் பகுதியாக உள்ளது. குறிப்பாக வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது. அடிக்கடி காட்டு யானைகள் ஊருக்கு வரும் இடமாக இன்று வரை வால்பாறை திகழ்கிறது. இதன் காரணமாகவே இரவில் அல்லது மாலையில் வால்பாறை பொள்ளாச்சி சாலையில் பயணிப்பது மிகவும் ஆபத்தானதாக பார்க்கப்படுகிறது. அதேநேரம் பகலில் செல்லும் வாகன ஓட்டிகளிடமும் சாலையில் கவனமாக செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் வால்பாறையில் உள்ள வாட்டர்பால்ஸ் அருகே எஸ்டேட் டைகர் வேலி பள்ளத்தாக்கு காட்சி முனை பகுதியில் நேற்று மாலை காட்டு யானை ஒன்று சாலையின் குறுக்கே நின்று கொண்டிருந்தது. அப்போது வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் சென்ற வாகன ஓட்டிகள், யானையை கண்ட உடன், சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டனர்.

ஆனால் பொள்ளாச்சியில் இருந்து ஜெர்மனி நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி மைக்கேல் (வயது 70) என்பவர் தனது பைக்கில் வால்பாறை நோக்கி யானையை கண்டு கொள்ளாமல் பயணித்தார். வாட்டர்பால்ஸ் அருகே சாலையில் நின்ற யானை ஆவேசத்துடன் சுற்றுலா பயணி மைக்கேலை தூக்கி வீசியது. பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. இதில் அவர் பலத்த காயம் அடைந்து மயங்கி விழுந்தார்.
கோவை மாவட்டம் வால்பாறையில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி, யானை சாலையில் நிற்பதை பார்த்த உடன் யூடர்ன் போட்டிருந்தால் உயிர் தப்பியிருப்பார் #Valparai #elephant #tourism pic.twitter.com/9CWFvRBTqD
— velmurugan (@velmurugantheni) February 5, 2025
யானை சென்றதும், அவரை அந்த பகுதி மக்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே யானை நிற்பதை தெரிந்தும் மோட்டார் சைக்கிளில் யானைக்கு அருகில் சென்ற ஜெர்மனி நாட்டு சுற்றுலா பயணியை யானை தாக்கி வீசிய வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் மைக்கேல் யானையை கண்ட உடன் யூடர்ன் போட்டிருந்தால் தப்பித்திருப்பார் என்று பலர் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications