குழந்தைனு கூட பார்க்காம.. கூலி தொழிலாளி செய்த கொடூரம்.. கோவையை அதிரவைத்த சம்பவம்
கோவை: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே 5 வயது சிறுமியிடம் கூலி தொழிலாளி ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அந்த நபர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, குழந்தைகள் ஆண், பெண் என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் பாலியல் வன்கொடுமை பிரச்னைகளுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

மகாராஷ்டிர மாநிலம், தானேவில் இரண்டு இரட்டைச் சிறுமிகள் 4 வயதே ஆன குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். கிருஷ்ணகிரியில் என்சிசி முகாம் என்ற பெயரில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது. இப்படி தினந்தோறும் விடிந்தாலே எதாவது ஒரு பாலியல் வன்கொடுமை பிரச்னைகளை கடந்து வந்து கொண்டேதான் இருக்கிறோம்.
இந்தப் பிரச்னைகள் ஒய்வதற்குள்ளேயே கோவையையே அதிர வைத்துள்ளது 5 வயது சிறுமி பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 45 வயதான கூலி தொழிலாளியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை பகுதியில் 5 வயது சிறுமி ஒருவர் வியாழக்கிழமை அந்தப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, விளையாடிக் கொண்டிருந்த சிறுமியிடம் கூலி தொழிலாளி ஒருவர் பேச்சு கொடுத்துள்ளார். விசாரணையில், காரமடையைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க கூலி தொழிலாளி என்பது தெரியவந்துள்ளது.
சிறுமியிடம் பேச்சுக் கொடுத்தவாறே அந்த கூலி தொழிலாளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மிகவும் அச்சமைடந்த சிறுமி தனக்கு நேர்ந்தது குறித்து தனது சகோதரியிடம் தெரிவித்துள்ளார். சிறுமியின் சகோதரி தனது உறவினர்களிடம் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து, 5 வயது சிறுமியை உறவினர்கள் உடனடியாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.
மேலும், இதுகுறித்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் இருந்து காரமடை காவல் துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவர் காரமடையை சேர்ந்த கூலித் தொழிலாளி பத்திரசாமி (45) என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, போலீஸார் கூலி தொழிலாளி பத்திரசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் போலீஸார் அடைத்தனர். இச்சம்பவம் மேட்டுப்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications