கோயம்புத்தூரில் ஊருக்குள்ளேயே சிறுத்தை.. இருகூரில் இருட்டில் எதேச்சையாக பார்த்தால்.. மிரண்ட ஓனர்
கோவை: கோயம்புத்தூர் மாநகரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து கணக்கிட்டு பார்த்தால் 15 கிமீ தூரம் தள்ளி இருக்கிறது. பாலக்காடு சாலையில் உள்ள மதுக்கரை அடர்ந்த வனப்பகுதியாகும். இங்கு சர்வ சாதாரணமாக வனவிலங்குகள் கடந்து செல்லும். இந்நிலையில் அங்கிருந்து 15 கிமீ தூரம் தள்ளியுள்ள கோவை இருகூர் ராவுத்தர் பிரிவு NEPC மில் எதிர்ப்புறம் அமைந்துள்ள குடோனில் கடந்த 12 தேதி சிறுத்தை நடமாட்டத்தை சிசிடிவி காட்சியில் கடை ஓனர் பார்த்து மிரண்டு போயிருக்கிறார்.
கோவை மாநகரத்தை ஒட்டியுள்ள மதுக்கரை முதல் தொண்டாமுத்தூர் அடுத்த நரசிபுரம், மருதமலை, காரமடை, மேட்டுப்பாளையம் என மேற்கு தொடர்ச்சி மலை நீண்டு செல்கிறது. இந்த பகுதிகள் வனவிலங்குகள் நிறைந்த பகுதியாகும். அடிக்கடி காட்டு யானைகள் வந்து செல்கின்றன. ஊருக்கு காட்டுயானைகள் புகுந்துவிடுவதால் இந்த பகுதிகளில் தான்.

மதுக்கரை வனச்சரகம்
இதில் மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட வனப் பகுதி என்பது கேரள மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த பகுதியில் எப்போதும் வன விலங்குகளின் நடமாட்டம் காணப்படும். பாலக்காடு கணவாய் இங்கு தான் உள்ளது. இந்த ஒரு கணவாய் இல்லை என்றால், ரயில் போக்குவரத்து என்பதும், எளிதான சாலை போக்குவரத்து என்பதும் கேரளாவிற்கு கிடைக்காமலேயே போயிருக்கும். அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இது கணவாய் என்பதுடன், அடர்ந்த வனப்பகுதி என்பதால், யானைகள், புலி, சிறுத்தை, கரடி, காட்டுமாடு உள்பட பல்வேறு வனவிலங்குகள் இந்த பகுதியை கடந்து செல்லும்.
பாலக்காடு கணவாய்
முன்பெல்லாம் அடிக்கடி யானைகள் பாலக்காடு ரயில் பாதையில் கடந்து சென்று அடிபடுவது வழக்கம். இப்போதும் பாலம் இருப்பதால் அந்த மாதிரியான நிகழ்வுகள் ஏற்படுவது இல்லை.. வனவிலங்குகள் அங்கு கடந்து சென்று வந்த நிலையில், அவ்வப்போது ஊருக்குள் வரும். குறிப்பாக யானைகள், சிறுத்தைகள் இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வருவது வழக்கம்
கோவை மாநகருக்குள் வந்த சிறுத்தை
இந்நிலையில் கடந்த நவம்பர் 12ம் தேதி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று கோவை மாநகரின் நுழைவுப்பகுதியான 15 கி.மீ தொலைவில் உள்ள இருகூர் பகுதிக்கு வந்திருக்கிறது, பின்னர் நொய்யல் ஆற்றுப்பகுதிக்கு அருகில் உள்ள தனியார் மோட்டார் கம்பெனிக்குள் நுழைந்துள்ளது, பின்னர் அந்த பகுதிக்குள் உலா வந்த சிறுத்தை அங்கிருந்து வெளியே சென்றது, அப்போது இரவு பணியில் இருந்த காவலர் சிறுத்தை அங்கிருந்து ஓடி செல்வதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார்.
சிறுத்தை ஓடியது
இந்த நிலையில் தனியார் கம்பெனிக்குள் சிறுத்தை வந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. அதில் சிறுத்தை பதுங்கி இருப்பது தெரியாமல் ரோந்து செல்லும் இரவு காவலர், சிறுத்தை ஓடுவதை பார்த்து அதிர்ச்சியில் உறையும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சிறுத்தை நடமாட்டம் குறித்து தகவல் அறிந்த கோவை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுத்தை நடமாட்டம் குறித்து ஆய்வு செய்தனர். மேலும் தற்போது அங்கே சிறுத்தை இருப்பதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications