"ஐயோ சொல்றேன் நம்புங்க".. கையெடுத்து கும்பிட்ட ஆ.ராசா.. மறித்த விவசாயிகள்.. கோவையில் பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் அமைய உள்ள தொழில் பூங்கா தொடர்பாக இன்று திமுக எம்பி ஆ. ராசாவை சந்தித்து விவசாயிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள்.

கோயம்புத்தூர் மற்றும் திருப்பூருக்கு இரண்டு நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் சென்று இருக்கிறார். பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிடும் முதல்வர் ஸ்டாலின் இன்று பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இன்று காலையில் கோவையில் நடந்த நிகழ்வில் முதல்வர் வ.உ.சி மைதானத்தில் ரூ.441.76 கோடி மதிப்பில் 23,534 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதேபோல் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். மேலும் ரூ.596 கோடி மதிப்பில் 67 புதிய பணிகளுக்கு முதல்வர் இன்று அடிக்கல் நாட்டுகிறார். இன்று கோவையில் மேலும் மேலும் சில நிகழ்வுகளில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார்கள்.

திருப்பூர்

திருப்பூர்

அதன்பின் திருப்பூர் செல்லும் முதல்வர் ஸ்டாலின் அங்கு பல நலத்திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். மேலும் திருப்பூரில் புதிய அரசு கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார். முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு இன்று இணையத்தில் கோபேக் ஸ்டாலின் என்று பாஜகவினர், அதிமுகவினர் டிரெண்ட் செய்து வந்தனர். அதேபோல் கோவை உங்களை வரவேற்கிறது என்று பொருள்படும் வகையில் #KovaiWelcomesStalin என்ற டேக்கும் டிரெண்ட் செய்யப்பட்டது.

கோரிக்கை

கோரிக்கை

கோவையில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள உள்ள நிலையில் பல்வேறு அமைச்சர்கள், திமுக எம்பிக்கள் கோவைக்கு சென்றுள்ளனர். முதல்வர் ஸ்டாலினுடன் பல்வேறு நிகழ்வுகளில் இவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த நிலையில் திமுக எம்பி ஆ. ராசாவை சந்தித்த கோவையை சேர்ந்த விவசாயிகள் பலர் பல்வேறு முக்கியமான கோரிக்கைகளை வைத்தனர்.

தொழில் பூங்கா

தொழில் பூங்கா

கோவையில் புதிய தொழில் பூங்கா அமைப்பது குறித்து அரசு திட்டமிட்டு வருகிறது. கோவை மேட்டுப்பாளயத்தில் இதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு சார்பாக இந்த தொழில் பூங்கா குறித்த அறிவிப்பு முன்பே வெளியிடப்பட்டுவிட்டது. இன்னும் நிலம் முழுமையாக தேர்வு செய்யப்படாத நிலையில் ஆய்வு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

தொழில் பூங்கா

தொழில் பூங்கா

அதேபோல் கடந்த 2006-11 திமுக ஆட்சியில் கோவையில் கிட்டாம்பாளையம் அருகே ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழிற்பேட்டை உருவாக்கும் பணிகள் நடந்தன. இதற்காக 316 ஏக்கரில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சியில் இந்த திட்டம் முடக்கப்பட்டது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்தும் திட்டத்தில் உள்ளது. அதோடு கோவையில் புதிய தொழில் பூங்கா அமைக்கவும் திட்டமிட்டு வருகிறது.

 3800 ஏக்கரில் நிலங்கள்

3800 ஏக்கரில் நிலங்கள்

இதற்காக மேட்டுப்பாளையத்தில் 3800 ஏக்கரில் நிலங்கள் கையப்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த செய்தி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதிகாரிகள் இன்னும் சர்வே பணிகளை தொடங்கவில்லை. ஆனாலும் மேட்டுப்பாளையத்தில் விவசாயிகள் மத்தியில் தங்கள் விவசாய நிலங்கள் அரசு மூலம் கையப்படுத்தப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

எம்பி ஆ. ராசா

இந்த நிலையில்தான் கோவையில் திமுக எம்பி ஆ. ராசாவை மறித்த விவசாயிகள், தங்கள் நிலங்களை கையகப்படுத்த கூடாது என்று கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு ஆ. ராசா.. நான் கண்டிப்பாக முதல்வரிடம் பேசுகிறேன். நான் முதல்வரிடம் சொல்கிறேன். நீங்கள் என்னை நம்புங்கள். கவலைப்படாதீங்க.

அளவு

அளவு

ஐயோ நான் சொல்கிறேன்.. என்னை நம்புங்கள் என்று கையெடுத்து கும்பிட்டார். அதன்பின், நானா தொழிற்சாலை அமைக்க போகிறேன்? நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள். நான் அரசிடம் பேசுகிறேன். இன்னும் அளவு எடுக்க ஆரம்பிக்கவில்லை. நிலத்திற்கு எவ்வளவு பணம் வேண்டும், எவ்வளவு நிலம் வேண்டும் என்று அதிகாரிகள் வேண்டுமென்றால் கேட்பார்கள்.

சர்வே எடுக்க மாட்டார்கள்

சர்வே எடுக்க மாட்டார்கள்

ஆனால் நாளையே சர்வே எடுக்க மாட்டார்கள். நில அளவு எடுக்கவும் நான் விட மாட்டேன். நீங்கள் பயப்பட வேண்டும். ஒரு முறை நீங்கள் வீட்டிற்கு போய் என்ன செய்ய வேண்டும் என்று யோசியுங்கள். நான் உங்கள் கோரிக்கையை முதல்வரிடம் பேசுகிறேன் என்று கூறினார். இதையடுத்து எம்பி ராசாவின் வாக்குறுதியை ஏற்று அங்கிருந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+