ஒன்னுல்ல, ரெண்டுல்ல.. 4 முறை ரவுடியுடன் ஓடிபோன பெண்.. நொந்து போன புருஷன்.. மிரண்டு போன கோவை போலீசார்

கள்ளக்காதலியை கடத்தி சென்ற ரவுடியை போலீசார் தேடி வருகிறார்கள்

Subscribe to Oneindia Tamil

கோவை: ஒரு இளம் மனைவி, மொத்தம் 4 முறை தன் கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு ஓடிப்போயுள்ளார்.. நொந்து போன கணவர் ஸ்டேஷன் வரை இப்போது சென்றுள்ளார்.

தேனியை சேர்ந்தவர் கோட்டைக்குமார்.. கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார்.. அந்த வீட்டின் ஓனர் பெயர் பிரபு.

கோட்டைக்குமார் ஒரு கிரிமினல்.. நிறைய வழக்குகள் இவர் மீது ஸ்டேஷனில் உள்ளது. இந்நிலையில், தன் வாடகைக்கு இருக்கும் ஹவுஸ் ஓனர் பிரபுவின் மனைவி பத்மஸ்ரீயை தன் காதல் வலையில் விழ வைத்துவிட்டார்..

 கள்ளக்காதல்

கள்ளக்காதல்

இருவரும் அடிக்கடி வெளியூர்களுக்கு சென்று தங்கி வந்துள்ளனர்.. இவர்கள் இருவரின் கள்ளக்காதல் விஷயமும் பிரபுக்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் தெரியவந்தது. பிரபுக்கு தன் மனைவி பத்மஸ்ரீ என்றால் கொள்ளை பிரியம்.. அதனால், கள்ளக்காதலை கண்டித்தவாறு இருந்துள்ளார்.. அதுமட்டுமல்ல, பிரபு சற்று பண வசதி உடையவராம்.

 கோட்டைக்குமார்

கோட்டைக்குமார்

மனைவி மீது பிரியம், இன்னொரு பக்கம் வசதியான பின்புலத்தை கவனித்த, கோட்டைக்குமார் ஒருநாள் பம்பஸ்ரீயை கடத்தி கொண்டு போய்விட்டார்.. பிறகு பிரபுக்கு போன் செய்து, இவ்வளவு பணம் தந்தால் ஒப்படைப்பேன் என்று மிரட்டி உள்ளார்.. பிரபுவும் வெளியே தெரிந்தால் மானம் போய்விடும் என்று நினைத்து, போலீசுக்கும் போகாமல், கோட்டைக்குமார் கேட்ட பணத்தை அப்படியே கொண்டு போய் தந்து, மனைவியை மீட்டு வந்துள்ளார்.

பணம்

பணம்

ஆனால் மறுபடியும் கோட்டைக்குமார் பத்மஸ்ரீயை கடத்தி கொண்டு போய்விட்டாராம்.. மொத்தம் இப்படியே 3 முறை கடத்தி கொண்டு போய் உள்ளார்.. அதாவது அந்த கடத்தல் நாடகத்துக்கு பத்மஸ்ரீயும் உடந்தையாக இருந்துள்ளார். தான் வைத்துள்ள ஆழமான பிரியத்தை வைத்து இப்படி தொடர்ந்து மிரட்டுவதை நினைத்து நொந்து போனார் பிரபு.

மிரட்டல்

மிரட்டல்

இந்நிலையில், கடந்த 15-ம் தேதி பிரபு வெளியே சென்றிருந்தபோது, கோட்டைக்குமார், தன் கள்ளக்காதலியை மறுபடியும் கத்தி முனையில் கடத்தி சென்றுவிட்டார். பிறகு. வழக்கம்போல, பிரபுவுக்கு போன் போட்டு ஒரு லட்சம் ரூபாய் தந்தால் உன் மனைவியை விட்டுவிடுகிறேன், இல்லையென்றால், மும்பையில் விற்றுவிடுவேன் என்று மிரட்டி உள்ளார்.

 தேடுதல் வேட்டை

தேடுதல் வேட்டை

இதற்கு மேல் பொறுமை இழந்த பிரபு, சூலூர் போலீசுக்கு புகார் தந்தார்.. அப்போதுதான், கோட்டைக்குமார் ஒரு கஞ்சா வியாபாரி என்பதும், அந்த ஸ்டேஷனிலும் பல புகார்கள் உள்ளதால், போலீசாரே அவரை தேடி கொண்டிருக்கின்றனர் என்பதும் தெரிந்தது.. இப்போது பிரபுவின் புகாரும் சேர்ந்துள்ளதால், அந்த கள்ளக்காதல் ஜோடியை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+