ஓம்கார் பாலாஜி கைது விவகாரம்.. முக்கிய முடிவெடுத்த இமக அர்ஜூன் சம்பத்
கோவை: கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது வெறுப்பு பேச்சு பேசியது தொடர்பான வழக்கில் இந்து மக்கள் கட்சி இளைஞர் அணித் தலைவர் ஓம்கார் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைதுக்கு கண்டனம் தெரிவித்தும், தொடர்ந்து துன்புறுத்தி அவமானப்படுத்துவதை கண்டித்தும் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் சார்பில் மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள ஈஷா யோகா மையம் குறித்து தொடர்ந்து நக்கீரன் வார இதழில் செய்தி வெளியாகி வந்தது. இந்நிலையில், நக்கீரன் வார இதழை கண்டித்து கடந்த 27 ஆம் தேதி கோவையில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்தார்.

அப்போது, அர்ஜூன் சம்பத்தின் மகனும், அக்கட்சியின் இளைஞர் அணி தலைவருமான ஓம்கார் பாலாஜியும் கலந்துகொண்டு கோரிக்கை குறித்து பேசினார். ஈஷாவுக்கு எதிராக செய்தி வெளியிடும் நக்கீரன் ஆசிரியர் கோபால் குறித்தும், அவரது நாக்கு அறுக்கப்படும் என்றும் பேசியிருந்தார்.
இதுதொடர்பாக, திமுக பிரமுகர் அளித்த புகாரின்பேரில், பந்தய சாலை காவல் துறையினர் ஓம்கார் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து, கடந்த சில நாள்களுக்கு முன்பு கோவை கெம்பட்டி காலனி பகுதியில் உள்ள வீட்டில் இருந்த ஓம்கார் பாலாஜியை அதிகாலையில் ரேஸ்கோர்ஸ் போலீசார் அதிரடியாக விசாரணைக்காக அழைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், குற்ற நோக்குடன் செயல்படுதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், ஓம்கார் பாலாஜியிடம் பல மணி நேரம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே காவல் துறையினர் ஓம்கார் பாலாஜியை கைது செய்ததாக கூறி இந்து மக்கள் கட்சி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
ஆனால், ஓம்கார் பாலாஜியிடம் விசாரணை மேற்கொள்ள அழைத்துச் சென்றதாகவும், கைது செய்யப்படவில்லை என்றும் போலீஸார் விளக்கம் அளித்ததைத் தொடர்ந்து அக்கட்சியினர் போராட்டத்தைக் கைவிட்டனர். இதைத்தொடர்ந்து முன்ஜாமின் கோரி ஓம்கார் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரி மனுதாக்கல் செய்ய ஓம்கர் பாலாஜிக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு ஓம்கார் பாலாஜி நேரில் ஆஜராகி நீதிமன்ற உத்தரவுப்படி மன்னிப்பு கேட்டு மனு கேட்டு மனு தாக்கல் செய்தார்.
ஆனால், அதனை ஏற்க மறுத்த நீதிபதி, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி என்று இல்லாமல் தானாக முன்வந்து மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதாகத்தான் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து திருத்திய மனுவை ஓம்கர் பாலாஜி சார்பில் மனு தாக்கல் செய்யாமல் கால அவகாசம் கேட்டனர்.
இதையடுத்து நீதிபதி, வழக்கை 19 ஆம் தேதி ஒத்திவைத்தார். பின்னர், ஓம்கார் பாலாஜியை திடீரென கைது செய்த போலீஸார் அவரை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். ஓம்கார் பாலாஜி கையில் சிலேட்டுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், ஓம்கார் பாலாஜி கைதுக்கு கண்டனம் தெரிவித்தும், இமக தொண்டர்களை கிரிமினல் குற்றவாளிகளைப் போல நடத்தி சமூக ஊடகத்தில் புகைப்படங்களை வெளியிடும் காவல் துறையின் அராஜகத்தை கண்டித்தும் மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு இமக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இமக தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளதாவது: இளைஞரணி ஓம்கார் பாலாஜி கைதுக்கு கண்டனம் தெரிவித்தல், இமக தொண்டர்களை அவமானப் படுத்தப்பட வேண்டும் என்று கிரிமினல் குற்றவாளிகளை படம் எடுத்து விளம்பரம் செய்வதுபோல ஓம்கார் பாலாஜியை படம் எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டு சட்டத்தை மீறி செயல்படும் காவல் துறையின் அராஜக போக்குக்கு கண்டனம் தெரிவித்தல்.
பங்களாதேஷ் இந்துக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினால் தமிழகத்தில் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் மீது வழக்கு, அச்சுறுத்தும் நடவடிக்கை, இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கு அச்சுறுத்தல், இமகவின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுப்பு, ஒரு கோடி இந்துக்களை உறுப்பினர்களாக கொண்ட கட்சி திமுக என்று பிரகடனம் செய்வது.
இந்து என்று சொன்னாலே நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுப்பு, காவல் துறை மூலம் கைது அச்சுறுத்தல், இமகவினருக்கு கருத்துரிமை, ஜனநாயக உரிமைகள் மறுப்பு, பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தல் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 17) காலை 11 மணிக்கு அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications