மேட்டுப்பாளையத்தை மிரட்டும் அந்த உருவம்.. அச்சத்தில் உறைந்த மக்கள்.. உலாவும் சிறுத்தையால் எச்சரிக்கை
கோவை: மேட்டுப்பாளையம் அருகே உள்ள கிராமத்தில் இரவு நேரத்தில் மூன்று மாத நாய் குட்டியை சிறுத்தை கவ்விச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தையை கூண்டுவைத்துப் பிடிக்க வனத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனச் சரகம். இந்த வனச் சரகத்திற்கு உட்பட்ட சென்னாமலை கரடு வனப்பகுதி அடிவாரத்தில் மோத்தேபாளையம், அறிவொளி நகர், குத்தாரிபாளையம், வெள்ளிப்பாளையம் ஆகிய கிராமப் பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக சிறுமுகை வனப் பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை ஒன்று நடமாடி வந்துள்ளது.

சென்னாமலை கரடு அடிவாரப் பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் வீட்டில் வளர்க்கும் ஆடு, மாடு உள்ளிட்ட வளர்ப்புப் பிராணிகளையும் கொன்று வருவதால் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நவம்பர் 8 ஆம் தேதி இரவு மோகன்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் உறங்குவதற்காகச் சென்றுள்ளனர். அப்போது, மோகன்குமாரின் மூன்று மாத நாய்க்குட்டி வீட்டுக்கு வெளியே அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருந்துள்ளது. அப்போது, சென்னாமலை கரடு பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று மோகன் குமாரின் வீட்டு காம்பவுண்ட் சுவரைத் தாண்டி குதித்து நாய்க்குட்டியை கடித்து கவ்விக் கொண்டு வனப் பகுதிக்குள் சென்றுள்ளது.
இதைப் பார்த்த மோகன் குமார் கடும் அதிர்ச்சி அடைந்தார். சந்தேகமடைந்த அவர் தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்துள்ளார். அப்போது, வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று குட்டி நாயை கடித்து குதறி கவ்வி இழுத்துச் சென்றது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னாமலை கரடு அடிவாரப் பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் வீட்டில் வளர்க்கும் ஆடு, மாடு உள்ளிட்ட வளர்ப்புப் பணிகளையும் கொன்று வருவதால் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சிறுமுகை வனத் துறையினருக்கு மோகன்குமார் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிறுமுகை வனத் துறையினர் சிறுத்தை நடமாட்டம் குறித்து அப்பகுதியில் ஆய்வு செய்தனர். அப்பகுதி மக்கள் சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத் துறையினருக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து , பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க வனத் துறையினர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications