Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அபிநந்தன் மீண்டும் போர் விமான பைலட்டாக பணியில் சேர முடியுமா? விமானப்படை தளபதி விளக்கம்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    வச்ச குறி தப்பவில்லை.. கோவையில் விமானப்படை தளபதி பேட்டி-வீடியோ

    கோவை: அபிநந்தன் மீண்டும் விமானப்படையில் பைலட்டாக பணியில் சேர முடியுமா, இல்லையா என்பதை அவரது மருத்துவ பரிசோதனை அறிக்கைதான் தெளிவுபடுத்த வேண்டும் என்று, விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா தெரிவித்தார்.

    கோவை அடுத்த சூலூர் விமானப்படை தளபதி தனோவா இன்று மதியம்,12.30 மணியளவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட, இந்திய போர் விமான பைலட் அபிநந்தன் மீண்டும் இந்திய விமானப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவாரா என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.

    Abhinandan flies again or not depends on his medical condition: Air Chief Marshal BS Dhanoa

    இதுகுறித்து தனோவா கூறுகையில், மீண்டும் அபிநந்தனை பைலட் பணியில் சேர்க்க முடியுமா இல்லையா என்பதை, நாங்கள் தீர்மானிக்க முடியாது. முழு அளவில் உடல் நிலை சரியாக மீளும்பட்சத்தில், மீண்டும் அதே யூனிட்டில் அவர் பணிக்கு சேர முடியும். இதற்கு நிறைய பேர் உடல்நிலை பரிசோதனை நடைமுறைகள் உள்ளன. உடல்நிலைதான் முக்கியமே தவிர, கைது நடவடிக்கை உள்ளிட்டவை மீண்டும் அவரை பணியில் சேர்ப்பதில் இருந்து தடுக்க ஒரு காரணமாக இருக்காது. இவ்வாறு தெரிவித்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+