சிறுமியை நான் மட்டுமே பலாத்காரம் செய்தேன்.. 6 மாதமாக விட்டு விட்டு பலாத்காரம்.. இளைஞர் வாக்குமூலம்
Recommended Video

கோவை : சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், சந்தோஷ்குமார் தான் மட்டுமே குற்றத்தில் ஈடுபட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் தெரிவித்துள்ளார்.
துடியலூரை அடுத்த பன்னிமடை அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் கடந்த 6 நாட்களாக விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக 50-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை செய்தனர். மேலும், சந்தேகத்திற்குரிய 6 நபர்களை தொடர்ந்து விசாரித்ததுடன், குற்றத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் சந்தோஷ்குமார், துரை, சதிஷ் மற்றும் விஜயகுமார் ஆகியோரை தொடர்ந்து விசாரித்து வந்தனர்.

பாட்டி வீடு
இந்நிலையில், தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ்குமார் தனது மனைவியை பிரிந்து தொண்டாமுத்தூர் உலியம்பாளையம் பகுதியில் வசித்து வந்துள்ளார் . அவ்வப்போது தனது பாட்டி வீட்டிற்கு கஸ்தூரிநாயக்கன்பாளையம் புதூருக்கு வந்து சென்றுள்ளார்.

செல்போன் எண்
இந்நிலையில் சிறுமி காணாமல் போன போது, சந்தோஷ்குமார் சம்பவ இடத்தில் இருந்துள்ளதற்கு, ஆதாரமாக, அப்பகுதியிலுள்ள டவரில் அவரது செல்போன் எண் இருந்துள்ளது. இந்நிலையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை போலீஸார் விசாரணையில் ஒப்புக்கொண்டார்.

அடிப்பட்ட குழந்தை
சந்தோஷ்குமார் கொடுத்த வாக்குமூலத்தில், சம்பவம் நடந்த அன்று மாலை தனது பாட்டி வீட்டில் இருந்த சந்தோஷ்குமார் வீட்டின் அருகே விளையாட வந்த சிறுமியை பிடித்து இழுத்துள்ளார். அப்போது கீழே விழுந்த சிறுமியின் நெற்றி மற்றும் தாடையில் அடிபட்டுள்ளது.

மீண்டும் பலாத்காரம்
பின்னர் சிறுமியை பலாத்காரம் செய்ததாகவும், அப்போது மயக்கமடைந்ததாகவும் மீண்டும் மயக்கம் தெளிந்தவுடன் வாயை பொற்றி பாலியல் வன்கொடுமைக்கு தொடர்ந்து ஆளாக்கியபோது சிறுமி இறந்துள்ளார்.

அப்பகுதி
குழந்தை இறந்ததை அடுத்து போலீசார் அப்பகுதியில் குழந்தையை தேடி வருவதை பார்த்துவிட்டு அதை டீ சர்ட்டில் மறைத்து வைத்து போலீசார் அப்பகுதியை விட்டு நகர்ந்தவுடன் அங்கிருந்த ஒரு இடத்தில் குழந்தையின் உடலை போட்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.

போலீஸார்
இச்சம்பவம் நடந்த அன்று, சந்தோஷ்குமாரின் பாட்டி உடல் நிலை சரியில்லாமல் இறந்துள்ளார். இதைத் தொடர்ந்து இரு நாட்களுக்கு பின்பே சந்தோஷ்குமாரை காவலில் எடுத்து போலீஸார் விசாரித்துள்ளனர்.

பாலியல் பலாத்காரம்
சந்தோஷ்குமார் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளதை அடுத்து இக்குற்ற சம்பவத்தில் ஒருவர் மட்டுமே ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. மேலும் சந்தோஷ்குமார் ஆறு மாதமாக இருமுறைக்கு மேல் சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாக தெரிகிறது.
இவர் எந்த கட்சியிலும் இல்லை எனத் தெரிகிறது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications