எங்க போனாலும் 'இப்படி' கேட்கறாங்க.. ரொம்ப கஷ்டமா இருக்கு.. தேர்தலில் இருந்து விலகிய மன்சூர் அலிகான்
கோவை: எங்குச் சென்றாலும் எவ்வளவு பணம் பெற்றுக்கொண்டு தேர்தலில் போட்டியிடுகிறாய் என்று கேட்பது வேதனையாக இருப்பதாகத் தெரிவித்துள்ள நடிகர் மன்சூர் அலிகான், சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியில் பல ஆண்டுகளாக இருந்தவர் நடிகர் மன்சூர் அலிகான். கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக இவர் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

சட்டசபை தேர்தலில் போட்டியிட இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய நடிகர் மன்சூர் அலிகான் தமிழ் தேச புலிகள் என்ற கட்சியை தொடங்கினார்.
முதலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தார். பின்னர், திடீரென்று தொண்டாமுத்தூர் தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அங்கு அதிமுக சார்பில் அமைச்சர் வேலுமணியும் திமுக சார்பில் கார்த்திகேய சிவசேனாபதி போட்டியிடுகிறார்கள்.
கடந்த சில நாட்களாகவே தொண்டாமுத்தூர் தொகுதியில் பிரசாரம் செய்துவந்தவர், திடீரென்று தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார். தொகுதியில் எங்குச் சென்றாலும் எவ்வளவு பணம் பெற்றுக் கொண்டு போட்டியிடுகிறாய் என்று கேட்கிறார்கள் என்று அது தனக்கு வேதனை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பிரிக்க தேர்தலில் போட்டியிடுவதாக நினைப்பது தனக்குக் கஷ்டமாக இருப்பதாகவும் அவர் கூறினார். தொகுதியில் சில இடங்களுக்குச் சென்றபோது, அமைச்சர் வேலுமணிக்கு நல்ல பெயர் இருந்ததாகவும் இதைத் தவிர தனக்கு அரசியல் தெரியாது என்றும் அவர் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications