மாரி செல்வராஜ் லெட்டரை நான் படிக்கலை.. சாதி மதம் பார்க்காம குழந்தைகளை படிக்க வைங்கடா.. நடிகர் சதீஷ்
கோவை: சாதி மதம் பார்க்காம குழந்தைகளை படிக்க வையுங்கடா என தேவர்மகன் சர்ச்சை குறித்து நடிகர் சதீஷ் பேட்டி அளித்துள்ளார்.
கோவை பேரூர் பகுதியில் உள்ள சேரன் கலை அறிவியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக நடிகர் சதீஷ் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் தான் நாயகனாக நடிக்கும் வித்தைக்காரன் படப்பிடிப்பு கோவையில் நடந்தது.

இரு வாரங்களுக்கு பிறகு மீண்டும் கோவைக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கரும்பலகையை பார்க்கும் போது யார் பேசினாலும் பேர் எழுதி வையுங்கள் என சொன்னால் நான் படித்த பள்ளியில் என் வகுப்பில் இருந்த போர்டில் என் பெயர்தான் இருக்கும். எனவே கரும்பலகையை பார்த்தாலே பயமாக இருக்கிறது.
அவ்வப்போது கனவில் தேர்வு எழுவதுவது போல் தோன்றுவதால் அதிர்ச்சியில் எழுந்துவிடுவேன். படிக்கும் போது எந்த விதமான தவறான விஷயத்திலும் ஈடுபட கூடாது. மது, போதை பழக்கம் உள்ளிட்டவை உடல்நலத்தை கெடுக்கும். அத்துடன் மிகப்பெரிய சொத்தான கல்வியையும் கெடுத்துவிடும். ஆசிரியர்களிடம் மாணவர்கள் மரியாதை நடந்து கொள்ள வேண்டும், நாங்களெல்லாம் படிக்கும்போது ஆசிரியருக்கு பயப்படுவோம்.
ஆனா இப்போது தலைகீழாக மாறிவிட்டது. மாணவர்கள் தகாத வார்த்தைகள் பேசுவது போன்று நிறைய வீடியோக்களை பார்க்கும் போது வேதனையளிக்கிறது. ஓடிடி மிகப்பெரிய வளர்ச்சியடைந்து இருக்கிறது. நல்ல தொழிலாக இருக்கிறது. இருப்பினும் தியேட்டர் ரெஸ்பான்ஸ் நன்றாக இருக்கும். நான் சிகரெட் பிடிக்க மாட்டேன், படத்திற்கு தேவைப்படும் பட்சத்தில் சிகரெட் தொடர்பான காட்சிகளில் நடிகர்கள் நடிக்கிறார்கள்.
திரைபட்டங்களில் உள்ள விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். மற்றவைகளை விட்டுத் தள்ளுங்கள். விஜய்யுடன் போட்டோ எடுக்கவேண்டும் என்பதற்காக படித்தால் நல்லது தானே. விஜய் இன்னும் இதுபோன்று மாணவர்களுக்கு உதவும் திட்டங்களை செய்வார் என தெரிவித்தார். மாமன்னன் இசைவெளியீட்டு விழா சர்ச்சை குறித்த கேள்விக்கு, ஜெயம் ரவி கூறியது போல் நானும் தூங்கிவிட்டேன் என்றார். மேலும் சதீஷ் கூறுகையில் நான் ஒரு ஆடியன்ஸாக பார்க்கிறேன். தேவர் மகன் எனக்கு மிகவும் படித்த படம். இறுதியில் வரும் வன்முறை வேண்டாம், சாதி, மதங்களைப் பார்க்காமல் பிள்ளைகளை படிக்கவையுங்கடா என்ற நல்ல கருத்தை மட்டும் தான் எடுத்துக் கொள்கிறேன். மாரி் செல்வராஜ் எழுதிய லெட்டரை நான் படிக்கவில்லை எனவும் சதீஷ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications