பிரபல நடிகரின் தம்பி திடீர் கைது.. சுற்றி வளைத்து பிடித்த கோவை போலீசார்.. என்ன நடந்தது..?
நடிகர் சுரேஷ்கோபியின் சகோதரர் மோசடி வழக்கில் கைதானார்
கோவை: நிலம் வாங்கி தருவதாக சொல்லி, தொழிலதிபரிடம் ரூபாய் 97 லட்சம் மோசடி செய்ததாக நடிகரும், கேரள பாஜக எம்பியுமான சுரேஷ் கோபியின் சகோதரர் சுனில் கோபியை கோவை போலீசார் தூக்கி சிறையில் வைத்துள்ளனர்.
கேரளத் திரை உலகில் பிரபலமாக உள்ளவர், நடிகர் சுரேஷ் கோபி.. இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிப்படங்களிலும் நடித்துள்ளார்...
இவருக்கு மொத்தம் மூன்று சகோதரர்கள் இருக்கிறார்கள். இதில் இரண்டாவது சகோதரர்தான் சுனில்கோபி.. இவர்மீதுதான் தற்போது புகார் எழுந்துள்ளது..

அட்வான்ஸ்
கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் கிரிதரன். இவரிடம் மதுக்கரை அருகே மாவுத்தம்பதி பகுதியில் 4.52 ஏக்கர் நிலம் விற்பனைக்கு இருப்பதாக சொல்லி, சுனில்கோபி கடந்த நவம்பர் மாதம் அணுகியுள்ளார்... அவர் காட்டிய நிலமும் பிடித்து போகவே, அதற்கு அட்வான்ஸாக 97 லட்ச ரூபாயை சுனில்கோபி அவரது நண்பர்கள் சிவதாஸ் மற்றும் ரீனா ஆகியோரது வங்கி கணக்குகளில் 97 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார்.

நடிகர் சுரேஷ் கோபி
அதாவது, சுனில் கோபி கோவை நவக்கரை பகுதியில் மயில்சாமி என்பவரது 4.52 ஏக்கர் நிலத்தை முதலில் வாங்கியுள்ளார். அதற்கான பத்திரப்பதிவு நடைபெற்ற நிலையில் பத்திரப்பதிவு செல்லாது என்று கோர்ட் அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து நீதிமன்றத் தகவலை மறைத்து, சுனில் கோபி கோவை ஜி.என். மில்ஸ் பகுதியைச் சேர்ந்த கிரிதரன் என்பவருக்கு அதனை விற்றுள்ளார். அந்த நிலத்திற்குதான் கிரிதரன் அட்வான்ஸ் ரூ.97 லட்சம் தந்திருக்கிறார். அந்த நிலத்தின் ஆவணங்களை சரி பார்த்தபோதுதான், அந்த நிலம் வேறு ஒருவருடைய பெயரில் இருந்தது தெரியவந்தது.

நடிகர் சுரேஷ் கோபி தம்பி
இறுதியில், அந்த நிலத்தின் சொத்து ஆவணங்களை சரிபார்த்தபோதுதான், அதில் வில்லங்கம் இருப்பது தெரியவந்தது. எனவே, இதுகுறித்து கிரிதரன், சுனில்கோபியை கேட்டுள்ளார்.. அதற்கு சுனில்கோபியும் பணத்தை ஒரு மாதத்தில் திருப்பி தந்து விடுவதாக உறுதியளித்துள்ளார்... ஆனால் பணத்தை திருப்பி தரவே இல்லையாம்.. இழுத்தடித்து கொண்டே வந்துள்ளார்.. இது குறித்து மறுபடியும் மீண்டும் கேட்டபோது தொழிலதிபர் கிரிதரனுக்கு சுனில்கோபி மிரட்டல் விடுத்ததாக சொல்லப்படுகிறது.

ஆவணங்கள்
இதனையடுத்து சுனில் கோபி, வேறு வழியில்லாமல் சிவதாஸ், ரீனா ஆகிய பேர் மீது கிரிதரன் கோவை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த கோவை மாவட்ட குற்றபிரிவு போலீசார், கூட்டுசதி, மோசடி, நம்பிக்கை மோசடி, தவறான ஆவணங்களை தயாரித்தல் உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து தனிப்படை போலீசார் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் இருந்த சுனில்கோபியை கைது செய்தனர்...

நடிகர் சுரேஷ்கோபி தம்பி
அதற்குள் சிவதாஸ், ரீனா இருவரும் தலைமறைவாகி விட்டனர்.. எனவே அவர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக, கோவை குற்றப்பிரிவு போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட சுனில் கோபி தற்போது ஜெயிலில் உள்ளார்.. கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல நடிகரும், பாஜக எம்பியுமான சுரேஷ் கோபியின் சகோதரர் கைதாகி ஜெயிலுக்கு போனது கேரள - தமிழக மாநிலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications