Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம்

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக நடிகை கஸ்தூரி கோவை வடக்கில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்து, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு கோரினார்.

கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து நடிகை கஸ்தூரி வடக்கு தொகுதிக்கு உட்பட்ட வடவள்ளி, வீரகேரளம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். வீரகேரளம் பகுதியில் பொதுமக்கள் இடையே உரையாற்றிய கஸ்தூரி, கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுக மக்களுக்கு என எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தவில்லை. மக்களுக்கான திட்டத்தை அதிமுக ஆட்சியில் மட்டுமே செயல்படுத்தினார்கள்.

Kasthuri Campaigns for Vanathi Srinivasan

வானதிக்கு உடல்நலக் குறைவு

பாஜக அதிமுக இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் ஒரு குடும்பத்தில் நடக்கும் சண்டையைப் போல் தான் மீண்டும் அவர்கள் இணைந்துள்ளது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும். எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சராக அமருவார். வடக்கு தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் உள்ள நிலையில் அவருக்காக அவரது மகன்கள் பிரச்சாரம் செய்து வருகின்றார். அவருக்கு உதவியாக நானும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளேன் மக்கள் அனைவருக்கும் அவருக்கு ஆதரவு தர வேண்டும் என்றார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கஸ்தூரி கூறுகையில், வானதி சீனிவாசன் அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவரை பார்ப்பதற்காக வந்தேன் அவர் அனைவருக்கும் முன் உதாரணமாக இருக்கிறார். கோவை வடக்கு தொகுதியில் அவருக்காக வாக்கு சேகரிக்கிறேன். அவர் இல்லை என்ற நிலையை போக்கும் வகையில் அனைவரும் உள்ளோம்.

8000 ரூபாய் கூப்பன்

தாய்க்காக அவரது மகன் களத்தில் இறங்கி பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டதிலிருந்து பரப்புரை பாதிக்கப்படக் கூடாது என அனைத்து தரப்பினரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பாஜகவில் உள்ள ஒவ்வொருவருக்கும் தியாக வரலாறு உள்ளது. இரட்டை இலை தாமரை சேர்ந்ததில் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒருங்கிணைந்து வேலை செய்கின்றனர்.

மற்ற மாநிலங்களில் இலவசங்களை அறிவித்துவிட்டு நிறைவேற்ற முடியாத இடத்தில் காங்கிரஸ் உள்ளது. இங்கும் அதேபோல் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால், கைவிரல் வெற்றி என்னும் வகையில் தான் நிறைவேற்றி உள்ளனர். 8000 ரூபாய் கூப்பன் மிகப்பெரிய அளவில் ஊழல் கமிஷன் கரப்ஷனுக்கு வழி வகுக்கும்.

ஆபசமாக பேசும் உதயநிதி

உதயநிதி ஸ்டாலின், அவர்களின் கட்சி உறுப்பினர்கள் பேச வேண்டியதை அவர் பேசுகிறார் எடப்பாடி பற்றி என்னவெல்லாம் பேசி உள்ளார். ஆபாசமாக பேசுகிறார். அப்பா வளர்ச்சி மகன் வளர்ச்சி அடுத்தது பேரன் வளர்ச்சி என மன்னர் குடும்பத்தின் வளர்ச்சியைத் தவிர வேறு ஏதும் இல்லை. குறைந்தபட்ச நாகரிகம் இல்லாமல் தமிழிசை சௌந்தரராஜன் மீண்டும் கவர்னராக அனுப்புவோம் எனக் கூறுகிறார். ஆனால், உன்னையே திரும்பவும் திரைப்படம் வினியோகிஸ்தராக அனுப்புவோம் என மக்கள் சொல்கின்றனர்.

என்னுடைய பரப்புரையில் ஏராளமான இளைஞர்கள் உள்ளனர் . இளைஞர்கள் எல்லோரும் டிவிகேவை நோக்கி செல்வது என்பது ஏப்ரல் 23 ஆம் தேதி தெரிந்துவிடும். விஜய் முதலில் பரப்புரைக்கு வர வேண்டும். அடிக்கடி பரப்புரையை ரத்து செய்கிறார். நாளை வருவார் என்பது நம்பிக்கை. விஜய் அவர்கள் அறிக்கை விடுகிறார்.

ஜனநாயகன் திரைப்படம்

அவருடைய கட்சியில் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்கள் ஜனநாயகம் திரைப்படம் வெளியானதற்கு பாஜக மற்றும் திமுக சதி எனக் கூறுகின்றனர். எதற்கு எடுத்தாலும் பாஜக மற்றும் திமுகவை கைகாட்டுகின்றனர். அடிப்படையான ஒரு விஷயம் அமைச்சர் எப்படி படத்தின் காப்பியை வெளியிட முடியும்?. சென்சார் காப்பி என்பது அங்கேயே படத்தை பார்த்துவிட்டு தயாரிப்பாளர்கள் எடுத்துச் சென்று விடுவார்கள். அதை யாராலும் ஓபன் செய்ய முடியாது.

பாட்டி வடை சுட்ட கதை சொல்வார்கள் அவங்க கிட்டதான் அந்த படம் இருந்தது. இப்போ படம் வெளியே வந்தால் தமிழக மக்கள், எல்லாம் படத்தை பார்ப்பார்கள். அதனால் ஒரு பயன் இருக்கும் என யார் நினைப்பார்கள். திமுக நினைக்குமா? பாஜக நினைக்குமா? என கேள்வி எழுப்பினார். இந்த படம் வெளிநாட்டில் இருந்து தான் வெளியாகி உள்ளது.

கரண்ட் கட்

படம் வெளியானது குறித்து என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். காவல் நிலையம் சென்று இருக்க வேண்டாமா?. இதை அரசியலாகுகின்றனர். இதை அரசியலாகுவதற்கான தேவை யாருக்கு உள்ளது என்று கேள்வி எழுப்பினார். நடிகை கஸ்தூரி பிரச்சார வேனில் பேசிக் கொண்டிருந்தபோது அடிக்கடி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால், அவர் உரையாற்றுவதை அவ்வப்போது நிறுத்தினார். ஒரு கட்டத்தில் பாதியிலேயே பிரச்சாரத்தை முடித்துக் கொண்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+