Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முன்னாள் எம்.எல்.ஏ மலரவன் காலமானார்.. எம்.ஜி.ஆரால் பெயர் சூட்டப்பட்டவர்.. அதிமுகவினர் இரங்கல்!

Subscribe to Oneindia Tamil

கோவை: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவும், கோவை மாநகராட்சியின் முன்னாள் மேயருமான மலரவன் இன்று காலமானார். அவரது மறைவுக்கு அதிமுக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் தா.மலரவன். இவர் கடந்த 2001ஆம் ஆண்டு அதிமுக சார்பில் கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். கோவை மாநகராட்சி மேயராக 2006ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார் மலரவன்.

AIADMK Former MLA and former Coimbatore mayor Malaravan Coimbatore passes away

முன்னாள் மேயர் - முன்னாள் எம்.எல்.ஏ: அதனைத்தொடர்ந்து 2006ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் கோவை மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார் மலரவன். 2011ஆம் ஆண்டு இந்த தொகுதி மறுசீரமைப்பில் கோவை வடக்கு தொகுதி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

2011 சட்டசபை தேர்தலில் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட்ட தா.மலரவன், சுமார் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ ஆனார். அதிமுகவின் பல்வேறு பொறுப்புகளிலும் பதவி வகித்துள்ளார். கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். மலரவனுக்கு இந்தப் பெயரை வைத்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓபிஎஸ் அணியில்: கடந்த 2016ஆம் ஆண்டில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக தலைமையை சசிகலா கைப்பற்ற முயன்றபோது, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபாவை ஆதரித்தவர்களில் மலரவனும் ஒருவர். பின்னர், ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தார்.

கடந்த 2020ஆம் ஆண்டு முதல் உடல் நலக்குறைவு காரணமாக மலரவன் தனது வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். அதிமுகவில் தலைமை பதவி தொடர்பாக ஓபிஎஸ் - எடப்பாடி இடையே மோதல் ஏற்பட்டபோது, இவர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்தார்.

மலரவன் மறைவு: பின்னர் உடல் நலக்குறைவு காரணமாக கட்சி செயல்பாடுகளில் இருந்து விலகி இருந்தார். இந்நிலையில் இன்று மலரவன் காலமாகியுள்ளார். மலரவன் மறைவையடுத்து அதிமுகவினர் பலரும் இரங்கல் தெரிவித்து, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மலரவன் மறைவையடுத்து, கோவை லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளரும், அதிமுக ஐ.டி விங் தலைவருமான சிங்கை ராமச்சந்திரன் நேரில் சென்று மலரவன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

ஓபிஎஸ் இரங்கல்: முன்னாள் எம்.எல்.ஏ மலரவன் மறைவுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். தா.மலரவன் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். மலரவனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று ஓ.பன்னீர்செல்வம் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

சசிகலா இரங்கல்: மலரவன் மறைவுக்கு வி.கே.சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "கோவை முன்னாள் மேயரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் மாவட்ட கழக செயலாளருமான தா.மலரவன் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

மலரவன் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உடன் பணியாற்றிய கழகத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

வேலுமணி வேதனை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "முன்னாள் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் மேயரும், கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினருமான, தா. மலரவன் அவர்கள் காலமான செய்தி அறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன்.

அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வதோடு, அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்." எனக் கூறியுள்ளார்.

விஜயபாஸ்கர் இரங்கல்: அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தனது இரங்கல் செய்தியில், "கோவை முன்னாள் மாநகர் மாவட்டக் கழக செயலாளரும், முன்னாள் மேயரும், கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினருமான தா. மலரவன் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை, அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+