என்னது திமுக- பாஜக இடையே போட்டியா? மக்கள் கிட்ட போய் கேளுங்க.. அண்ணாமலைக்கு எடப்பாடி நறுக் பதிலடி!
கோவை: லோக்சபா தேர்தலில் எந்தெந்த கட்சிகளிடையே போட்டி என பொதுமக்களிடம் கேட்டுப்பார்த்தால் உண்மை தெரிய வரும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அளித்த பேட்டி: லோக்சபா தேர்தலில் திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே போட்டி என அண்ணாமலை சொல்வதற்கு நான் என்ன செய்ய முடியும்? மக்களிடத்தில் போய் கேளுங்க.. யார் யாருக்கு எதிரி என மக்களிடம் கேட்கட்டும். அப்போது மக்கள் தெளிவாக சொல்வாங்க.

பிரதான எதிர்க்கட்சி: அண்ணா திமுகதான் பிரதான எதிர்க்கட்சி. 30 ஆண்டுகாலம் தமிழ்நாட்டில் ஆட்சி செய்த கட்சி. தமிழ்நாட்டில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைக் கொண்டு வந்த கட்சி அதிமுக. வேண்டும் என்றே திட்டமிட்டு சில பேர் சொல்றாங்க.. அதற்கு நாங்க என்ன செய்ய முடியும்?
உதயநிதிக்கு பதில்: திமுகவுடன் போட்டி போடுவதில் அதிமுக- பாஜக இடையே போட்டி என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொல்லி இருப்பது மாய உலகத்தில் மிதந்து கொண்டு பேசுகிறார். நாடாளுமன்ற தேர்தல் வரும் போது அதற்கு விடிவு காலம் பிறக்கும்.

தெளிவான முடிவுதான்: பாஜகவுடன் இனி ஒருபோதும் கூட்டணி இல்லை. இது தொடர்பாக அதிமுக தெளிவான முடிவை எடுத்து அறிவித்துவிட்டது. பத்திரிகை, ஊடகங்கள்தான் எதையாவது எழுதிக் கொண்டிருக்கின்றன. விவாத நடத்துகின்றன. ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பாக விவாத மேடை நடத்துகிறீர்களா? ஒரு விவாத மேடையாவது அரசாங்கம் பற்றி வைக்கிறீங்களா? என்ன பயம்னே எங்களுக்கு தெரியலை? ஆளும் கட்சியாக நாங்க இருக்கும் போது எங்களை எப்படி எல்லாம் விமர்சனம் செஞ்சீங்க? நடைபெறும் தவறுகளை தர்ம நீதியாக சுட்டிக்காட்ட வேண்டும்.

பாஜக கருத்து: கூட்டணி தொடர்பாக பாஜக தலைவர்கள் சொல்கிற கருத்துகளுக்கு நாங்கள் பொறுப்பாளியாக முடியாது. எங்களுடைய நிலைப்பாட்டை நாங்கள் தெளிவாக சொல்லிவிட்டோம். அதன்பிறகும் தினந்தோறும் ஏதேனும் ஒரு கேள்வியை அதுபற்றி கேட்டுக் கொண்டிருந்தால் என்ன பதில் சொல்வது? மீண்டும் மீண்டும் பாஜக பேசுவதாக பேசிக் கொண்டிருந்தால் என்ன?
அதிமுகவின் அஜெண்டா: லோக்சபா தேர்தலில் பல மாநிலங்களில் கட்சிகள் பிரதமர் வேட்பாளரையே அறிவிக்கவில்லையே.. தமிழ்நாட்டு உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். தமிழ்நாடு வளர்ச்சி பெற புதிய திட்டங்கள் வழங்கப்பட வேண்டும். அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களது பிரதான கோரிக்கை. அதிமுக அதிக இடங்களில் வெல்லும் போது யார் ஆட்சிக்கு வந்தாலும் இதனையே வலியுறுத்துவோம்.

அட்ரஸ் இல்லாமல் போகும்: டிடிவி தினகரனை நாங்கள் பொருட்படுத்துவதே இல்லை. அவர் கட்சியே இல்லை. அவரது கட்சியையும் நாங்க பார்க்கிறது இல்லை. இந்த தேர்தலுடன் அவரது அட்ரஸ் காணாமல் போய்விடும். விலாசம் தெரியாத ஒரு கட்சியாகும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு!












Click it and Unblock the Notifications