அதிமுக மாஜிகளுக்கு வலை.. செங்கோட்டையன் கொடுக்கும் உத்தரவாதம்.. கொங்கில் ஓட்டை போடும் தவெக!
கோவை: கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்கள் மற்றும் நிர்வாகிகளை தவெக பக்கம் கொண்டு வர செங்கோட்டையன் தீவிரமாக இயங்கி வருவது தெரிய வந்துள்ளது. தேர்தலின் போது செலவு செய்வதற்கு தங்களிடம் பணம் இல்லை என்று கூறினாலும், என்னை நம்பி தவெகவுக்கு வருமாறு செங்கோட்டையன் போனில் தொடர்பு கொண்டு பேசி வருவது அதிமுகவை அதிர செய்துள்ளது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், அடுத்த ஒரு மாதத்தில் தவெக தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து ஆதரவாளர்களுடன் அக்கட்சியில் இணைந்து கொண்டார். தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பும், கொங்கு மண்டல அமைப்பாளர் பொறுப்பும் அளிக்கப்பட்டது.

இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் விஜய்யை அழைத்து வந்து பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை செங்கோட்டையன் நடத்திக் காட்டினார். இதன்பின் அதிமுக மாஜிக்களை தவெக பக்கம் கொண்டு வரும் அசைன்மென்ட் செங்கோட்டையன் வசம் அளிக்கப்பட்டது. அதேபோல் அமமுக மற்றும் ஓபிஎஸ் ஆகியோரை தவெக கூட்டணிக்குள் கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தவும் செங்கோட்டையனிடம் பொறுப்பு அளிக்கப்பட்டது.
அதற்கேற்ப செங்கோட்டையன் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள், நிர்வாகிகளை நேரடியாக தொடர்பு கொண்டு பேசி வருகிறார். இந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவில் யாருக்கு எல்லாம் சீட் கிடைக்காதோ, யாரெல்லாம் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்காமல் அதிருப்தியில் இருக்கிறார்களோ அவர்களை நேரடியாக செங்கோட்டையன் தொடர்பு கொண்டு வருகிறார்.
அண்மையில் கூட சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ-வான பல்பாக்கி சி.கிருஷ்ணன் செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் இணைந்து கொண்டார். இதுபோல் இன்னும் பலரும் அதிமுகவில் இருந்து விலகி தவெக பக்கம் செல்வார்கள் என்று கணிக்கப்படுகிறது. சிலர் நேரடியாக தேர்தலில் செலவு செய்ய பணம் இல்லை என்று கூறினாலும், என்னை நம்பி வருமாறு செங்கோட்டையன் அழைத்திருக்கிறார்.
இதனால் தேர்தல் நெருங்கும் போது அதிமுகவில் இருந்து ஒரு பெரும் படையே தவெக பக்கம் செல்லும் என்று பார்க்கப்படுகிறது. அதிமுகவுக்கு வலுவாக இருக்கும் கொங்கு மண்டலத்தில் செங்கோட்டையன் ஓட்டை போட்டு வருவது வரும் சட்டசபைத் தேர்தலில் கடுமையான சேதாரத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது. ஆனாலும் எடப்பாடி பழனிசாமி அமைதி காப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
-
ஸ்டியரிங்கை பிடித்த விஜய்.. 'சிங்கப்பெண்' திட்டத்தை தொடங்கி வைத்து கையோடு ரோந்து வாகனத்தை ஓட்டினார்! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
அனைத்து டெண்டர்களும் நிறுத்தம்.. புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட அறநிலையத்துறை முடிவு! -
எம்ஜிஆர் வழிபட்ட அதே கோவில்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் விஜய்! அந்த தங்க வாள் ரகசியம் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
மின் வெட்டை தடுக்க களமிறங்கும் 10 சிறப்பு குழுக்கள்.. பறக்கும் 125 மின் தடை நீக்க ரோந்து வாகனங்கள்! -
தொடங்கியது இடைத்தேர்தல் ஃபீவர்.. 5 தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல்.. தேர்தல் ஆணையம் போட்ட உத்தரவு! -
ஜான் ஆரோக்கியசாமியின் டெல்லி லாபி.. திமுகவுக்கு தூதுவிட்ட சுனில்.. சபரீசனுக்கு வந்துச்சே கோபம் -
தெற்கில் வேகமெடுக்கும் தவெக வியூகம்.. நாதக நிர்வாகிகளை இழுக்க முதல்வர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்! -
தவெக வெற்றியைத் தொடர்ந்து.. தேசிய அளவில் காங்கிரஸுக்கு வியூகம் வகுக்கிறார் ஜான் ஆரோக்கியசாமி! -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
எச்டி ஹூண்டாய் தூத்துக்குடி திட்டம் இன்னும் ‘கன்பார்ம்’ ஆகல! குண்டை போட்ட கொரிய தலைவர் KIM!











Click it and Unblock the Notifications