"வீல் சேர் இல்லை".. குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை.. கோவை அரசு மருத்துவமனை மறுப்பு
கோவை: கோவை அரசு மருத்துவமனை சிகிச்சை பெற வந்த 84 வயதான முதியவருக்கு வீல் சேர்கள் வழங்கப்படாததால் முதியவரை தோல் மேல் சாய்த்து அவரது மகனே இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ஊழியர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில், வீல் சேர் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனவும், உண்மைக்கு புறம்பானது எனவும் கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவமனைக்கு உள்ளூர மட்டுமின்றி கேரளம், கர்நாடக மக்கள், திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் நாள்தோறும் சிகிச்சை பெற வந்து செல்கின்றனர். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிக்கு வீல் சேர் வழங்கப்படவில்லை எனக் கூறி வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது.

அந்த வீடியோவில் 85 வயதான நோயாளி ஒருவரை அவரது மகன் இழுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய மருத்துவமனை நிர்வாகம், பணியின்போது அலட்சியமாக செயல்பட்ட தனியார் நிறுவன ஒப்பந்தப் பணியாளர்கள் இருவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்தது.
இதைத்தொடர்ந்து, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த சம்பவங்கள் குறித்து அங்கு பதிவாகி இருந்த சிசிடிவி காட்சி மூலம் ஆய்வு செய்யப்பட்டது. இதுகுறித்து கோவை அரசு மருத்துவகல்லூரி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குறித்து 10.09.2025 அன்று சில பத்திரிகைகளில் "சக்கர நாற்காலி வழங்காமல், 100 ரூபாய் லஞ்சம் கேட்டனர்" என்ற குற்றச்சாட்டுடன் செய்தி வெளியானது.
இதுகுறித்த விசாரணையில் 9.09.2025 அன்று காலை 11.00 மணியளவில் வடிவேல் (85) அவர்கள் தமது உறவினருடன் ஆட்டோவில் மருத்துவமனைக்கு வந்தார். அவர் ஆட்டோவில் இருந்து இறங்கியதும், வாக்கர் உதவியுடன் மருத்துவமனைக்குள் நுழைந்தார். JICA (ஜே.ஐ.சி.ஏ.) கட்டடத்தின் முதல் மாடியில் உள்ள இரத்த நாள அறுவை சிகிச்சை பிரிவில் (Vascular Surgery) பரிசோதிக்கப்பட்டார்.
மேலும், பாதிக்கப்பட்ட காலில் இரத்த ஓட்டம் திருப்திகரமாக இருந்ததால், அவரை பொது அறுவை சிகிச்சை பிரிவிற்கு (General Surgery) அனுப்பினர்.
அப்போது நோயாளியின் உறவினர், கீழ்தளத்தில் சக்கர நாற்காலி கேட்டார். ஆனால், அதற்கான பணியாளர் அன்றைய நேரத்தில் மற்றொரு நோயாளியை சக்கர நாற்காலியில் அழைத்துச் சென்றிருந்ததால், சுமார் 15 நிமிட தாமதம் ஏற்பட்டது. பின்னர் சக்கர நாற்காலி வழங்கப்பட்டபோதிலும், நோயாளியின் உறவினர் அதை ஏற்க மறுத்து, அங்கிருந்த பணியாளருடன் வாக்குவாதம் செய்தார்.
இந்த நேரத்தில், நோயாளியின் உறவினர் வெளியில் இருந்த ஆட்டோ ஓட்டுநரை அழைத்து வந்தார். சிசிடிவி காட்சிகளில் தெளிவாக காணப்படுவதுபோல, நோயாளியின் கையில் இருந்த வாக்கரை பலவந்தமாக அகற்றி, அதை ஆட்டோ ஓட்டுநரிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து, தனது மொபைல் போனை ஆட்டோ ஓட்டுநரிடம் கொடுத்து வீடியோ எடுத்து, நோயாளியின் நிலையை பெரிதுபடுத்த முயன்றார்.
மேலும், நோயாளி நடந்து செல்ல சிரமப்பட்டபோதும், உறவினர் அவரை பலவந்தமாக இழுத்துச் செல்லும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. பின்னர் மருத்துவமனை நுழைவாயிலில், "சக்கர நாற்காலி வழங்கவில்லை" என்ற பெயரில் செயற்கையாக குழப்பம் ஏற்படுத்தப்பட்டது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
அரசு மருத்துவமனை மீது வெளியிடப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை. மருத்துவமனையை குற்றம் சாட்டும் நோக்கில் இச்சம்பவம் நிகழ்த்தப்பட்டதாகத் தெரிகிறது. கோவை அரசு மருத்துவமனையில் போதுமான அளவு சக்கர நாற்காலிகள் மற்றும் ஸ்ட்ரெச்சர்கள் உள்ளன. லஞ்சம் கேட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டிற்கும் எந்தவிதமான ஆதாரமும் இல்லை.
இருப்பினும், நோயாளி சேவையில் சிரமம் ஏற்பட்டதை கருத்தில் கொண்டு, பணியில் அலட்சியம் காட்டிய கிரிஸ்டல் மேற்பார்வையாளர்களுக்கு எதிராக உடனடி இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், அனைத்து பணியாளர்களுக்கும் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மருத்துவமனை குறித்து வெளியிடப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, உண்மைக்குப் புறம்பானவை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. அந்த சிசிடிவி காட்சிகளில் நோயாளி வாக்கர் மூலம் நடந்து வருவதும், அதனை அகற்றிவிட்டு வலுக்கட்டாயமாக அவரை இழுத்துச் செல்வதுமான காட்சிகள் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications