லுலு மால்.. கோவை லுலு ஹைப்பர் மார்க்கெட் கூட்டம்.. இதுதான் காரணமா? கடுப்பில் கோயம்புத்தூர் வணிகர்கள்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையின் லுலு மால் தொடர்ந்து சிறப்பு கவனம் பெற்று வருகிறது.. ஆடி மாதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு சர்ப்ரைஸ் தந்துள்ளது.. இதனால் கோவைவாசிகள், லுலுவில் எந்நேரமும் குவிந்து வருகிறார்களாம்.

கோயம்புத்தூரை பொறுத்தவரை, ஏற்கனவே ஷாப்பிங் மால்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள், டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ், போன்றவை என அதிகமாகவே செயல்பட்டு வருகின்றன. ஆனாலும், வீட்டு பொருட்கள் ஒரே இடத்தில் கிடைக்கக்கூடிய லுலு ஹைப்பர் மார்க்கெட், கடந்த ஒரு வருட காலமாகவே கோவை மக்களின் கவனம் பெற்று வருகிறது.

lulu Kovai lulu mall

தமிழகத்தின் முதல் ஹைப்பர் மார்க்கெட், அவிநாசி சாலை, லட்சுமி மில்ஸ் வளாகத்தில், 1.20 லட்சம் சதுர அடியில் செயல்பட்டு வருகிறது.. முதல்நாள் இந்த லுலு திறக்கப்பட்டு கூட்டம் காணப்பட்டதை போலவே, இப்போதுவரை நெரிசல் மிகுந்தே காணப்படுகிறது. இதற்கு ஒரே காரணம், பொருட்களின் விற்பனையில் அவ்வப்போது தள்ளுபடி சலுகைகளை அறிவித்தவாறே உள்ளது லுலு மால்.

தள்ளுபடி: தீபாவளி என்றால் 60 சதவீதம் வரை தள்ளுபடி, பொங்கல் என்றால் 50 சதவீதம் தள்ளுபடி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் என்றால் 60 சதவீதம் தள்ளுபடி அரிசி, கோடை காலம் என்றால் ஏசி பொருட்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி போன்றவைகள் அறிவிக்கப்படுகின்றன..

அதுமட்டுமல்ல, இந்த மால் திறக்கப்பட்டு, சமீபத்தில் ஒருவருடம் முடிந்த நிலையில், "ஒரு மணி நேரத்திற்கு ஒரு ஆபர்" என்ற அறிவிப்பு மக்களை வியக்க வைத்தது.. காரணம், இந்த ஒருவருட நிறைவு முன்னிட்டு, 5 நாட்களுக்கு குறிப்பிட்ட பொருட்களுக்கு 50 சதவீத தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருந்தது.

இதோ தற்போது ஆடி மாதம் நடந்து கொண்டிருக்கிறது.. ஆடி ஆஃபர் வெளியிட்டு தொடர்ந்து கோவையை தன்னுடைய ஈர்ப்பில் வைத்திருக்கிறது லுலு மால்.. ஆடி மாதம் ஆரம்பத்ததுமே 50 சதவீத தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது..

மளிகை பொருட்கள்: தினசரி உபயோக பொருட்கள், மளிகை பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப்பொருட்களுக்கு இந்த தள்ளுபடி சலுகை வழங்கப்பட்டிருப்பதாலும், வரும் ஆகஸ்ட் மாதம் 4-ந் தேதி வரை இந்த தள்ளுபடி உள்ளதாலும், கூட்டம் அதிகமாகவே காணப்பட்டு வருகிறது. 100 ஹைப்பர் மார்க்கெட்டில் தினசரி ஏராளமானோர் குவிந்து பொருட்களை அள்ளிச்செல்கிறார்கள்.

இதில் தற்போது ஒரு ஹைலைட் என்னவென்றால், உணவு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.. ஏற்கனவே, பாதாம் போன்ற உணவு பொருட்கள் திருவிழா என்ற பெயரில் சிறப்பு விற்பனை சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. ஆனால், இப்போது ஆடி மாதம் என்பதால், மற்றொரு உணவு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், இது "தானிய உணவு திருவிழா" ஆகும்.. உடலுக்கு சத்து தரக்கூடிய தானிய வகைகளைக் கொண்டு, அனைத்து உணவுகளும் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர் எதிர்ப்பு: ஏற்கனவே அரிசியில் தள்ளுபடி என்று ஒரு ஆஃபர் வெளியிடப்பட்டிருந்தது.. இதைக்கண்ட அரிசி வியாபாரிகள் மொத்த பேரும் கதிகலங்கி போனார்கள்.. கோவையிலுள்ளதை போல சென்னையில் லுலுவை திறக்க விட மாட்டோம் என்றும் வணிகர் சங்கங்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.. எனினும், வணிகர்களின் கடுமையான எதிர்ப்புகளையும் தாண்டி, லுலுமால் கோவை மக்களை கவர்ந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+