முதல்வர் சொல்வதை ஆளுநர் செயல்படுத்த வேண்டும்.. ஈகோ பார்க்கக்கூடாது.. அன்புமணி ராமதாஸ் பேட்டி!
கோவை: கோவை விமான நிலையத்தில் இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆளுநர் - முதல்வர் இடையே ஈகோ இருக்கக்கூடாது எனத் தெரிவித்தார்.
அன்புமணி ராமதாஸ் பேசுகையில், "கர்நாடகாவில் நடப்பது அரசியல் கூட்டம். அதில் முதலமைச்சர் பங்கேற்கலாம். அந்தக் கூட்டத்தில் மேகதாது விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆறுகளிலும் 10 கிலோ மீட்டருக்கு தடுப்பணைகள் கட்ட வேண்டும்.

தமிழ்நாடு ஆளுநரும், முதல்வரும் இணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டுக்கு நல்லது. ஆளுநர் நடுநிலையாகவும், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் செயல்பட வேண்டும். முதல்வர் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர். முதலமைச்சர் என்ன சொல்கிறாரோ அதைச் செயல்படுத்த வேண்டியது ஆளுநரின் கடமை.
இருவருக்கும் இடையே ஈகோ இருக்கக்கூடாது. அரசியல் சார்பு இருக்கக்கூடாது. ஆளுநரின் அரசியல் சார்பு என்னவாக இருந்தாலும் அதனை தனிப்பட்ட முறையில் வைத்துக்கொள்ள வேண்டும். கட்சி சார்பு கருத்துகளை வெளிப்படையாகச் சொல்லக்கூடாது. நீதிபதி, ஜனாதிபதி போல, ஆளுநர் இருக்க வேண்டும். அரசியல் கட்சிகள், கொள்கைகள் பற்றி பேசக்கூடாது. தவறு நடந்தால் தட்டிக் கேட்கும் அதிகாரம் இருக்கிறது." எனத் தெரிவித்தார்.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்!












Click it and Unblock the Notifications