பங்காளி கட்சி.. கூட்டணிய பாருங்க SDPI கூட.. திமுகவும் அதிமுகவும் ஒண்ணு.. ரவுண்டு கட்டிய அண்ணாமலை!
கோவை: திமுகவைப் போலவே, பங்காளிக் கட்சியும், தீவிரவாத இயக்கமான PFI இயக்கத்துடன் தொடர்புடைய SDPI உடன் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என விமர்சித்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
கடந்த 5 ஆண்டுகளாக பாஜக - அதிமுக கூட்டணி அமைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களை எதிர்கொண்ட நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தக் கூட்டணி உடைந்தது. அண்ணாமலையின் பேச்சுகளால் கூட்டணியை முறித்துக்கொண்டது அதிமுக. வரும் லோக்சபா தேர்தலில் எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணியை அமைத்துள்ளது அதிமுக. இந்நிலையில், எஸ்.டி.பி.ஐ உடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.

கோவை குண்டுவெடிப்பு சம்பவம்: கோவையில் கடந்த 1998ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி பல இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 58 பேர் உடல் சிதறி பலியாகினர். குண்டுவெடிப்பு நிகழ்ந்த 26ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று பாஜகவினரால் கடைபிடிக்கப்பட்டது. கோவை ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் முன்பு இன்று, கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு புஷ்பாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதைத்தொடர்ந்து, இந்நிகழ்வு தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் அண்ணாமலை.
"இந்தியாவையே உலுக்கிய, கோவை தீவிரவாத தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதல் நடந்து, இன்றோடு 26 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆயினும், இன்றும் அதன் தாக்கம், தமிழக மக்களின் மனதில் ஆறாத வடுவாய், அழியாத ரணமாய் உறைந்திருக்கிறது. 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று, கோவை குண்டு வெடிப்பில் தங்கள் இன்னுயிரை நீத்த 58 அப்பாவிப் பொதுமக்களுக்கு புஷ்பாஞ்சலி செலுத்தி மரியாதை செய்தோம். தமிழகத்தில் மேலும் ஒரு தீவிரவாதத் தாக்குதலை எதிர்கொள்ள, தமிழக மக்கள் மனதளவில் கூடத் தயாராக இல்லை.

திமுக ஆட்சியில் தீவிரவாதிகளுக்கு சொர்க்கபுரி: ஆனால், ஆட்சியில் இருக்கும் திமுக, பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து எந்தக் கவலையும் இல்லாமல், தீவிரவாதிகளைக் காப்பாற்றும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டு வருவதை, பொதுமக்கள் கவலையுடன் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். எப்போதெல்லாம் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தமிழகம் தீவிரவாதிகளுக்கும், பிரிவினைவாதிகளுக்கும் ஏற்ற இடமாக, சொர்க்கபுரியாகவே இருந்து வருகிறது.
கடந்த 1991 ஆம் ஆண்டு, முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் படுகொலையை விசாரிக்க ஏற்படுத்தப்பட்ட ஜெயின் கமிஷன் அறிக்கையில், திமுக தலைவர் கருணாநிதி, விடுதலைப் புலிகள் அமைப்பைத் தமிழகத்தில் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தார் என்றும், காவல்துறையினரை, விடுதலைப் புலிகள் அமைப்பினர் இருக்கும் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வலியுறுத்தியிருந்தார் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. விளைவு, முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். திமுகவுடன் இன்று கூட்டணியில் இருக்கும் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு வேண்டுமானால் இவை மறந்திருக்கலாம். ஆனால், பொதுமக்கள் மறக்கவில்லை.

1998 ஆம் ஆண்டு, இதே பிப்ரவரி 14 அன்று, பாரத ரத்னா அத்வானி அவர்கள் பேசவிருந்த பொதுக்கூட்ட மேடையிலிருந்து 100 மீட்டர் தொலைவில் வெடிகுண்டு வெடித்து, பின்னர் கோவையில், உக்கடம், காந்திபுரம், ரயில்வே சந்திப்பு, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எனத் தொடர் குண்டுவெடிப்பின் காரணமாக, 58 உயிர்களை இழந்தோம். 250க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்தக் குண்டுவெடிப்புக்குக் காரணமான தீவிரவாதிகள் 9 பேரை, கடந்த 2009 ஆம் ஆண்டு, அண்ணாதுரை நூற்றாண்டு விழா என்று கூறி விடுதலை செய்த திமுக, தற்போது, முக்கியத் தீவிரவாதி பாஷா உட்பட மீதமிருக்கும் 16 பேரையும் விடுதலை செய்யத் துடிக்கிறது.
திமுக அரசு தோல்வி: கடந்த 2023 அக்டோபர் மாதம், இவர்கள் செய்த குற்றத்தின் தீவிரத்தை உணர்ந்து, உச்சநீதிமன்றம், இவர்களுக்கு ஜாமீன் கொடுக்கக் கூட மறுத்தது. ஆனால், தேர்தலுக்கு முன்பாக இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று திமுக துடிப்பதன் நோக்கம் என்ன?
கடந்த 2022 ஆம் ஆண்டு, கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலை நாம் யாரும் மறந்திருக்க முடியாது. தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரித்து, பலரைக் கைது செய்து, தீவிரவாதத் தாக்குதல் என்பதை உறுதி செய்த பிறகும், இன்றளவும், சிலிண்டர் வெடிப்பு என்று கூறி வரும் திமுக, தமிழகக் காவல்துறை மீதும் அழுத்தம் கொடுத்து அவ்வாறே சொல்ல வைத்திருக்கிறது. கோவையில் இது போன்ற தாக்குதல் நடைபெற வாய்ப்பு உள்ளது என்று தேசிய உளவுத் துறை எச்சரிக்கை செய்தும், அதனைக் கண்டுகொள்ளாமல், நிர்வாகத்தில் முற்றிலுமாகத் தோல்வியடைந்திருக்கிறது திமுக அரசு. பல்வேறு வெடிபொருள்கள், ISIS தொடர்பு, 13 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் என அனைத்தும் வெளிப்பட்ட பிறகும், எதற்காக சிலிண்டர் வெடிப்பு என்று நாடகமாடிக் கொண்டிருக்கிறது திமுக?

நேற்றைய தினம், தமிழகத்தில் 12 இடங்களில், NIA சோதனை நடத்தியதில், அரபிக் வகுப்புகள் என்ற பெயரில் தீவிரவாதப் பயிற்சிகள் தமிழகத்தில் அளிக்கப்பட்டு வருவது வெளியாகி அதிர்ச்சியளித்திருக்கிறது. சென்னை மற்றும் கோவையில் அரபிக் கல்லூரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழக உளவுத் துறை முற்றிலுமாகத் தோல்வியடைந்துள்ளதால், தமிழகத்தில் பல முறை NIA சோதனைகள் நடைபெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், திமுக இது குறித்து எந்தக் கவலையும் இல்லாமல், சமூக வலைத்தளங்களில் செயல்படும் பாஜகவினரைக் குறிவைத்து நடவடிக்கை எடுக்கிறது.
மத்தியில் கடந்த 2004 - 2014ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது, நாடு முழுவதும் பல இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்து வந்ததை நாம் அறிவோம். நூற்றுக்கணக்கான பொதுமக்கள், நாடு முழுவதும் தீவிரவாதத் தாக்குதல்களுக்குப் பலியாகினர். கடந்த 2014 ஆம் ஆண்டு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியாவினுள் எங்கும் தீவிரவாதத் தாக்குதல்கள் நிகழாமல் நாடு பாதுகாப்பாக இருக்கிறது. எல்லையில் நடைபெறும் கோழைத்தனமான தீவிரவாதத் தாக்குதல்களுக்கு, அவர்கள் இடத்திற்குச் சென்றே பதிலடி கொடுத்து, அவர்கள் இருப்பையே அழிக்கும் ஆண்மையுள்ள ஆட்சி மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தீவிரவாதம் என்பது அனைவருக்கும் எதிரி என்பதை இஸ்லாமியச் சகோதர சகோதரிகள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். பாஜக ஆட்சியில்தான் நாடு பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை அறிந்திருக்கிறார்கள்.
பங்காளிக் கட்சி கூட்டணி: திமுகவைப் போலவே, பங்காளிக் கட்சியும், தீவிரவாத இயக்கமான PFI இயக்கத்துடன் தொடர்புடைய SDPI உடன் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். PFI தீவிரவாத இயக்கம் இதுவரை தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் பல பாஜக, ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களைப் படுகொலை செய்ததோடு வெடிகுண்டுகள் மற்றும் பெட்ரோல் குண்டுகள் வீசித் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. இவர்கள் அனைவரின் நோக்கம், பொதுமக்கள் பாதுகாப்பை அடகு வைத்தாவது அதிகாரத்தை அடைய வேண்டும் என்பது மட்டும்தானே தவிர, மக்கள் நலன் அல்ல. இதைக் கருத்தில் கொண்டு வருகிற பாராளுமன்ற தேர்தலில் நமது மக்கள் வாக்களிக்க வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார் அண்ணாமலை.
-
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
கிராமங்கள் vs நகரங்கள்.. 2021 சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுகவின் செயல்பாடுகள் எப்படி? -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
திமுக VS அதிமுக.. தமிழகத்தில் எந்த கூட்டணி பலம்? 2021 -2026 ஒப்பீடு.. ‘வெயிட்' காட்டும் கட்சிகள் -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
இது திமுக கோட்டை.. அதிமுகவுக்கு ஒத்துவராது.. சென்னையை கூட்டணி கட்சியிடம் தாரைவார்க்க தயாரான எடப்பாடி -
30 தொகுதிகளின் பட்டியல்.. அதிமுக கோட்டையை கேட்கும் பாஜக.. எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதன் பின்னணி! -
2 தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ரங்கசாமி.. புதுச்சேரி முதல்வரின் 2 சீட் வெற்றி ஃபார்முலா -
"மிஷன் கேரளா.." சத்தமே இல்லாமல் இறங்கிய ஆர்எஸ்எஸ்.. தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்! -
புதுச்சேரியில் மார்ட்டின் மகனால் தெறித்து ஓடும் பாஜக? ரங்கசாமி போட்ட சைலண்ட் ஸ்கெட்ச்.. அப்போ விஜய் -
வாக்காளர் லிஸ்டில் பெயர் இல்லை! ஆனால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகை! கேரளாவில் NDA சொதப்பல்












Click it and Unblock the Notifications